மேலும்

நாள்: 5th April 2017

அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த இறுதி உடன்பாடு செய்யப்படவில்லை

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கும் சீன நிறுவனத்துக்கும் இடையில் இன்னமும் இறுதி உடன்பாடு ஏற்படவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சீனாவின் உயர் அரசியல் ஆலோசகர் சிறிலங்காவுக்குப் பயணம்

சீனாவின் உயர்மட்ட அரசியல் ஆலோசகர் யூ செங்சென்ங் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று சீனாவின் குளோபல் ரைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பற்றியெரியும் கொள்கலன் கப்பல் – தீயை அணைக்க இந்திய, சிறிலங்கா படைகள் போராட்டம்

கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் பற்றியெரிந்து கொண்டிருக்கும் எம்.வி. டானியேலா என்ற கொள்கலன் கப்பலில் தீயை அணைப்பதற்கு சிறிலங்கா, இந்தியா கடற்படைகள் மற்றும் இந்திய கடலோரக் காவல்படை, சிறிலங்கா விமானப்படை என்பன கூட்டாக பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

விடுதலைப் புலிகளுக்காக நிதிசேகரித்தவர்களின் தண்டனையை உறுதி செய்தது டச்சு உச்சநீதிமன்றம்

விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்தார்கள் என்ற குற்றச்சாட்டில், சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட, விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் நால்வருக்கான தண்டனையை நெதர்லாந்து உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் மீது கவனம் செலுத்தும் ஜேர்மனி – தூதுவர்களுக்கான கூட்டம் சிறிலங்காவில்

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை, புதிய மூலோபாய மற்றும் இராஜதந்திர முன்னுரிமைக்குரிய பகுதியாக கருதி, ஜேர்மனி தனது நாட்டு தூதுவர்களுக்கான கூட்டம் ஒன்றை முதல் முறையாக சிறிலங்காவில் ஒழுங்கு செய்துள்ளது.

விசாரணைகளில் இருந்து இராணுவத்துக்கு விலக்கு அளிக்க முடியாது – சிறிலங்கா காவல்துறை

சர்ச்சைக்குரிய விசாரணைகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினருக்கு விலக்கு அளிக்க முடியாது என்று சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

ஜெனிவா தீர்மானம் குறித்த நாடாளுமன்ற விவாதம் அரை நாளாக குறைப்பு

ஜெனிவா தீர்மானம் தொடர்பாக நாளை நடைபெறவிருந்த முழுநாள் நாடாளுமன்ற விவாதம், அரை நாளாக குறைக்கப்பட்டுள்ளது.

ஒட்டாவா உடன்பாட்டில் சிறிலங்காவை கையெழுத்திடக் கோருகிறது பிரித்தானியா

கண்ணிவெடிகளைத் தடை செய்யும் ஒட்டாவா உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திட வேண்டும் என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் இந்திய கடலோரக் காவல்படைக் கப்பல்

இந்திய கடலோரக் காவல்படையின் சிஜிஎஸ் சூர் என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல், நல்லெண்ண மற்றும் பயிற்சிக்கான பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

சம்பந்தனைச் சந்தித்துப் பேசினார் ஜேர்மனி நாடாளுமன்றத் தலைவர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜேர்மனி நாடாளுமன்றத் தலைவர் பேராசிரியர் கலாநிதி லம்மேர்ட், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.