மேலும்

நாள்: 22nd April 2017

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்

சிறிலங்காவுக்கு மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தீர்மானம் ஒன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவொன்றே இந்த தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

10 நாடுகளில் கடற்படைத் தளங்களை அமைக்க சீனா திட்டம்- சிறிலங்காவும் உள்ளடக்கம்?

பத்து நட்பு நாடுகளில் சீனக் கடற்படையின் தளங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று சீன இராணுவத்தின் அதிகாரபூர்வ நாளிதழான PLA Daily ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குப்பைமேடு சரிந்த இடத்தில் பரவியுள்ள மீதேன் வாயு – ஜப்பானிய நிபுணர்கள் எச்சரிக்கை

மீதொட்டமுல்லவில் குப்பை மேடு சரிந்த பகுதியில் மீதேன் வாயுவின் அளவு அதிகமாக இருப்பதாக ஜப்பானிய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சாதாரணதரத் தேர்வு முடிவுகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் படுமோசம்

அண்மையில் வெளியான கபொத சாதாரண தரத் தேர்வு முடிவுகளில், திருகோணமலை கல்வி வலயத்தைச் சேர்ந்த ஐந்து பாடசாலைகளில் இருந்து எந்தவொரு மாணவரும் தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அதிபர் தேர்தலுக்கு முன்னர் கூட்டமைப்புக்கு எழுத்து மூலம் வாக்குறுதி வழங்கினார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிட்ட போது, சிறிலங்கா படையினர் வசம் இருக்கும் தனியார் காணிகளை விடுவிப்பதாக மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எழுத்து மூலம் உறுதி வழங்கியிருந்தார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை துறைமுக திருத்தப்பட்ட உடன்பாட்டு வரைவு அமைச்சரவையில்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பான,  திருத்தப்பட்ட உடன்பாட்டு வரைவு, வரும் ஏப்ரல் 25ஆம் நாள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.