மேலும்

சீனாவின் நிதி, நிபுணத்துவ உதவியுடன் ஊடகப் பயிற்சி அகடமி

Srilanka-chinaசிறிலங்காவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள ஊடக பயிற்சி அகடமிக்கு நிதியுதவியையும் நிபுணத்துவ ஆற்றலையும் வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது.

இந்த திட்டம் தொடர்பான சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சருக்கும் சீன அரச பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

சீன வெளியீட்டு மற்றும் ஊக்குவிப்பு சமூகத்தின் தலைவர் ஷிசு சூ தலைமையிலான குழுவினருடன் இந்தப் பேச்சுக்கள் சிறிலங்கா நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளன.

இதன் போதே, சிறிலங்காவில் புதிதாக அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள ஊடக பயிற்சி அகடமிக்கான நிதியுதவியையும் நிபுணத்துவ ஆற்றலையும் வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *