மேலும்

வறுமைக்கோட்டுக்குள் உள்ள மாவட்டங்களின் பட்டியலில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

jaffna-tamils (1)சிறிலங்காவில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாவட்டங்களில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகியனவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரங்கள் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

வறுமைக்கோட்டு எல்லையைத் தீர்மானிக்கும், தனிநபர் ஒருவருக்கான மாத வருமான எல்லை, 2017 ஜனவரி மாதம், 4,207 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது பெப்ரவரி மாதம், 4,229 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 4,229 ரூபாவுக்கு கீழ் தனி நபர் ஒருவரின் மாத வருமானங்கள் உள்ள மாவட்டங்கள், வறுமைக்கோட்டுக்குட்பட்டவையாக பட்டியலிடப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டம் ஆகக் கூடிய தனிநபர் வருமானம் உள்ள மாவட்டமாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு தனிநபர் ஒருவரின் மாத வருமானம்,  4,396 ரூபாவாகும்.

அதையடுத்து, கம்பகா (ரூ. 4,391), களுத்துறை(ரூ 4,281),  மாத்தளை (ரூ 4,248), நுவரெலிய (ரூ. 4,266), மன்னார் (ரூ. 4,368),, வவுனியா (ரூ. 4,322), கிளிநொச்சி (ரூ. 4,288), மட்டக்களப்பு (ரூ. 4,281), திருகோணமலை (ரூ. 4,230), கேகாலை (ரூ. 4,270),  ஆகிய மாவட்டங்கள், வறுமைக்கோட்டுக்கு மேலுள்ள மாவட்டங்களாக இனங்காணப்பட்டுள்ளன.

அதேவேளை, கண்டி (ரூ. 4,222), காலி (ரூ. 4,089), மாத்தறை (ரூ. 4,063), அம்பாந்தோட்டை (ரூ. 3,895), யாழ்ப்பாணம் (ரூ. 4,169), முல்லைத்தீவு (ரூ. 4,183), அம்பாறை (ரூ. 4,197), குருணாகல (ரூ. 4,086), புத்தளம் (ரூ. 4,225), அனுராதபுர (ரூ. 4,001), பொலன்னறுவ (ரூ. 4,171), பதுளை (ரூ. 4,054), மொனராகல (ரூ. 3,843), இரத்தினபுரி (ரூ. 4,110). ஆகிய  மாவட்டங்கள் வறுமைக்கோட்டுக்குள் உள்ளவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

வறுமைக்கோட்டுக்குள் உள்ள 12 மாவட்டங்கள் முன்னர் ஜேவிபியின் கோட்டையாக இருந்தவையாகும்.

அதேவேளை, முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த 8 மாவட்டங்களில் இரண்டு மாத்திரமே வறுமைக்கோட்டுக்குள் இருக்கின்றன என்று கடந்த 14 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *