மேலும்

ஏறு தழுவுதலுக்கு ஆதரவாக வடக்கு, கிழக்கு, கொழும்பில் பரவலாக போராட்டங்கள் – படங்கள்

trincomalee (1)தமிழ்நாட்டில் ஏறு தழுவுதல் விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று வடக்கு, கிழக்கு, மற்றும் கொழும்பில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

ஏறு தழுவுதல் போட்டிக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ்நாட்டு உறவுகளின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தும் கொழும்பில் இரண்டு இடங்களிலும், திருகோணமலை, கல்முனை, மன்னார், வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலும் இன்று போராட்டங்கள் இடம்பெற்றன.

கொழும்பில் காலி முகத்திடலில் இன்று காலை 11 மணியளவிலும், வெள்ளவத்தையில் இன்று பிற்பகல் 4 மணியளவிலும் இரண்டு மாபெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

திருகோணமலை மக்கெய்சர் விளையாட்டரங்கு பகுதியில்  இன்று பிற்பகல் பெருமளவானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனையிலும்,  மன்னாரிலும், வல்வெட்டித்துறையிலும் பெருமளவானோர் இன்று போராட்டங்களில் ஈடுபட்டனர்.

யாழ்.நகரில் பொது நூலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம்  ஒன்றும் நடத்தப்பட்டது.

திருகோணமலையில்…

trincomalee (1)trincomalee (2)trincomalee (3)trincomalee (4)trincomalee (5)

கல்முனையில் …

kalmunai- (1)kalmunai- (2)kalmunai- (3)

கொழும்பு – காலிமுகத்திடலில்…

Galleface (1)Galleface (2)

வல்வெட்டித்துறையில்…

valvettiturai (1)valvettiturai (2)valvettiturai (3)

மன்னாரில் …..

mannar (1)mannar (2)mannar (3)

கொழும்பு- வெள்ளவத்தையில் ….

wellawatta (2)wellawatta (1)wellawatta (3)

யாழ்ப்பாணத்தில்….

jaffna

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *