மேலும்

அம்பாந்தோட்டையில் கடற்படை, விமானப்படைத் தளங்களை அமைக்க சிறிலங்கா அரசு உத்தரவு

ravindra-ranil-2அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அருகே நிரந்தர கடற்படைத் தளம் ஒன்றை அமைக்கவும், மத்தல விமான நிலையம் அருகே நிரந்த விமானப்படைத் தளம் ஒன்றை அமைக்கவும் சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, துறைமுகப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதன்போது, துறைமுக சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்படுத்தப்பட்டதுடன், வெளிநாட்டுக் கப்பல்களும் தடுத்து வைக்கப்பட்டன.

இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் பாதுகாப்பு அளிக்கும் வகையில், அம்பாந்தோட்டை துறைமுகம் அருகில் நிரந்தர கடற்படைத தளத்தை அமைக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

மத்தல விமான நிலையத்தையும், சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அங்கும் இதுபோன்ற பிரச்சினைகள் எழுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால், விமான நிலையம் அருகே சிறிலங்கா விமானப்படைத் தளம் ஒன்றை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ravindra-ranil-2

அலரி மாளிகையில் நேற்று சிறிலங்கா கடற்படைத் தளபதியைச் சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் இதனை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்

“அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்குப் பெறும் சீன நிறுவனம், தாம் நிர்வாகத்தை பொறுப்பேற்பதற்கு முன்னர், துறைமுகத்துக்கு அருகே நிரந்தர கடற்படைத் தளம் ஒன்றை அமைக்குமாறு கோரியுள்ளது.

இந்தப் பகுதியில் கடற்படையின் பிரசன்னம் முக்கியமானது. ஏனென்றால், கப்பல்களை பழுதுபார்க்கும் தளம், இயற்கை எரிவாயு மின் நிலையம், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் என்பன துறைமுகப் பகுதியில் அமைக்கப்படவுள்ளன.

மத்தல விமான நிலையத்துக்கு அருகிலும், விமானப்படைத் தளம் ஒன்றை அமைக்குமாறு சிறிலங்கா அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.” என்று அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *