மேலும்

சிறிலங்கா கடற்படைக்கு கோவாவில் கட்டப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது

opv-launching-1சிறிலங்கா கடற்படைக்காக கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது.

இந்தியாவின் கோவா மாநிலத்தில் உள்ள கோவா கப்பல் கட்டும் தளத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் சித்ராங்கனி வகீஸ்வரா, சிறிலங்கா கடற்படையின் பிரதி தலைமை அதிகாரி றியர் அட்மிரல் நீல் றொசாரியோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறிலங்கா கடற்படைக்காக இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை கோவா சிப்பிங் யார்ட் நிறுவனம் கட்டி வருகிறது. முதலாவதாக கட்டப்பட்ட ரோந்துக் கப்பல் ஏற்கனவே வெள்ளோட்டம் விடப்பட்டு சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

opv-launching-1opv-launching-2

இந்த நிலையில் இரண்டாவது கப்பல் நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது.சோதனைப் பயணங்களின் பின்னர், தேவையான கருவிகள் பொருத்தப்பட்டு, இந்தக் கப்பல்கள் சிறிலங்கா கடற்படையிடம் கையளிக்கப்படும்.

105.7 மீற்றர் நீளத்தைக் கொண்ட இந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பலில், உலங்குவானூர்தியை இறக்கும் தளமும் உள்ளது. 18 அதிகாரிகள் 100 கடற்படையினர் பணியாற்றும் வசதிகள் உள்ள இந்தக் கப்பல் 4500 கடல்மைல் தொலைவு வரை சென்று கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் ஆற்றலையும் கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *