மேலும்

நல்லிணக்கம், பொறுப்புக்கூறலுக்கு பிரித்தானியா உதவும் – பொங்கல் விழாவில் ஹியூகோ ஸ்வைர்

hugo swireநல்லிணக்கம், பொறுப்புக்கூறல் உள்ளிட்ட சிறிலங்காவின் முயற்சிகளுக்கு பிரித்தானியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று, பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வைர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“ தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் பங்குபற்றுவதையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.

சூரியன் அளித்த நன்மைகளுக்கு பிரதியுபகாரம்செய்யும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதுவே புதிய ஆரம்பங்களுக்கான நேரமாகும்.

இதுவே புதிய சகாப்தத்தை புதிய பண்புகளை உருவாக்கும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.

hugo swire

சிறிலங்காவில்  தேர்தலுக்கு பின்னர் குறிப்படத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.

கிளிநொச்சியில் சில குடும்பங்களை சந்தித்து உரையாடியிருந்தேன். அவர்கள் தமது வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பி வருகிறார்கள்.

மூன்று பத்தாண்டுகால உள்நாட்டு மோதல்களுக்குப் பின்னர் தற்போது முன்னேற்றகரமான சில விடயங்கள் காணப்படுகின்றன.

தற்போது பொதுமக்கள் அச்சமற்ற சூழலில் இருக்கிறார்கள். ஊடகங்கள் சுதந்திரமாக செயற்படுகின்றன. நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட்டு சிறந்த நாடு உருவாக்கப்பட வேண்டும்.

சிறிலங்கா சிறந்த எதிர்காலத்தை எட்டுவதற்காக பிரித்தானிய அரசாங்கம், பிரித்தானிய மக்கள் அனைவரும் எம்மால் முடியுமான எத்தகைய உதவிகளையும் வழங்கத் தயாராகவுள்ளோம்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், மனித உரிமைகளை மேம்படுத்தல், பொறுப்புக்கூறல், ஊழல் மோசடிகளை கட்டுப்படுத்தல் ஆகியவற்றுக்காக சிறிலங்கா அரசாங்கத்திற்கு நாம் தொடர்ந்தும் பங்களிப்புக்களை வழங்குவோம்.

அனைத்து இலங்கையர்களும் சமாதானமிக்க சிறந்த எதிர்காலம் அமைவதற்கு இந்நாளில் வாழ்த்துகிறேன். அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *