மேலும்

மாதம்: December 2015

2016 சுவிஸ் அரசியல்சட்டவரம்பும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பும் – ஓர்பார்வை

ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக குடியேறியிருக்கும் வெளிநாட்டவர்கள் குற்றச்செயல்களிலும் பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டு வருவதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கும் நிலையில் சுவிட்சர்லாந்தில் புதியசட்டம் ஒன்றுக்கான முன்மொழிவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

மாற்றுத் தலைமையை உருவாக்கும் கூட்டம் அல்ல – கருணாநிதி பாணியில் விக்கி அறிக்கை

யாழ்ப்பாணத்தில், நடத்தப்பட்ட இரகசியக் கூட்டத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை ஒரு அரசியற் கட்சியோ, மாற்றுத் தலைமையை ஏற்படுத்துதற்கான ஆரம்பக் கூட்டமோ அல்ல என்று, தி.மு.க தலைவர் கருணாநிதி பாணியிலான கேள்வி – பதில் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

குடும்பத்துடன் கொழும்பு வந்த நிஷா பிஸ்வால் – அரசியல் வட்டாரங்களில் குழப்பமான தகவல்கள்

அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், சிறிலங்காவுக்கு நேற்று அதிகாலை திடீர் பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், அவரது இந்தப் பயணம் தொடர்பான குழப்பமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இடம்பெயர்ந்த மக்களை 6 மாதங்களுக்குள் மீளக்குடியேற்றுவதாக சிறிலங்கா அதிபர் வாக்குறுதி

வடக்கில் போரினால் இடம்பெயர்ந்த மக்கள் ஆறு மாதங்களுக்குள் சொந்த இடங்களில் மீளக்குடியேற்றப்படுவர் என்றும், இதற்கென சிறப்பு செயலணி ஒன்று உருவாக்கப்படும் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் உறுதியளித்துள்ளார்.

பூனைக்கு மணி கட்டுவது யார்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உருவாக்கிய முரண்பாடுகள் இப்போது, உட்கட்சி விவகாரம் என்பதையும் தாண்டி, சர்வதேச விவகாரமாக மாற்றம் பெற்றிருக்கிறது.

சிறிலங்கா அதிபருக்கான ஒபாமாவின் சிறப்புச் செய்தியுடன் வந்தார் நிஷா பிஸ்வால்?

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சிறப்பு செய்தி ஒன்றுடனேயே, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவி செயலர் நிஷா பிஸ்வால் கொழும்பு வந்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்துக்கான பயிற்சித் தேவைகள் குறித்து ஆராய்ந்தது சீன படை அதிகாரிகள் குழு

சிறிலங்கா இராணுவத்துக்குத் தேவையான பயிற்சிகள் தொடர்பாக ஆராய்வதற்காக, சீனாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் ஆறு பேர் கொண்ட குழுவொன்று அண்மையில் கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

யாழ். ஆயரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

தேசிய நத்தார் விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, யாழ். ஆயர் வண.ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

உலக மாற்றங்களை சிறிலங்கா இராணுவம் ஏற்றுக்கொள்ள வேண்டும்- ரணில்

உலகளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை சிறிலங்கா இராணுவம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிராம இராச்சியத்தை ஒருபோதும் கூட்டமைப்பு ஏற்காது – மாவை சேனாதிராசா

மாகாணசபைகளுக்கு இருக்கும் குறைந்தளவு அதிகாரங்களையும் பறித்தெடுக்கும் வகையில், சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்துள்ள, கிராம இராச்சிய திட்டத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.