மேலும்

மாதம்: December 2015

பாகிஸ்தான் பிரதமர் ஜனவரி 4 இல் சிறிலங்கா வருகிறார்– 10 உடன்பாடுகளும் கையெழுத்திடப்படும்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்   அடுத்த மாதம் 4ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையில் 10 புரிந்துணர்வு உடன்பாடுகளும் கையெழுத்திடப்படவுள்ளன.

இத்தகைய சந்தர்ப்பம் இனி அமைவது கடினமே – சுமந்திரன்

நாட்டின் பிரதான கட்சிகள் இரண்டு இணைந்து ஆட்சி அமைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை நாம் கவனமாகக் கையாள வேண்டும். இப்படிப்பட்டதோர் சந்தர்ப்பம் இனி அமைவது கடினமே என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

இன்னமும் முடிவுறாத சிறிலங்காவின் ஜனநாயக மாற்றம்

புத்தாயிரம் ஆண்டு சவால் கூட்டுத்தாபனத்தின் (Millennium Challenge Corporation’s (MCC)) இயக்குனர் சபையானது அண்மையில் தனது இறுதிக் காலாண்டுக் கூட்டத்தை நடத்தியிருந்தது.

கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்திடமாட்டோம் – ஹர்ஷ டி சில்வா

இந்தியா உள்ளிட்ட எந்தவொரு நாட்டுடனும், கண்ணை மூடிக் கொண்டு உடன்பாடுகளில் கையெழுத்திட சிறிலங்கா அரசாங்கம் தயாராக இல்லை என்று, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நாளையுடன் ஓய்வு

போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நாளையுடன் ஓய்வு பெறவுள்ளதாக திவயின சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

விசாரணைப் பொறிமுறை குறித்து தீவிர ஆலோசனை – சிறிலங்கா அதிகாரி தகவல்

ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு  அமைய, முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணை  பொறிமுறை கட்டமைப்பு தொடர்பாக  பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடல்களும் ஆலோசனைகளும் இடம்பெற்று வருவதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுனாமியில் சிக்கிவிட்டாராம் சம்பந்தன் – சிங்களப் பேரினவாதிகள் பரிகாசம்

விக்னேஸ்வரன் என்ற சுனாமிப் பேரலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்  சம்பந்தன் சிக்கி தவிக்கிறார் என்று தெரிவித்துள்ளார், மகிந்த ராஜபக்ச அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன.

கூட்டமைப்பை பிளவுபடுத்தும் தேவை அரசாங்கத்துக்கு இல்லை – என்கிறார் லக்ஸ்மன் கிரியெல்ல

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்த வேண்டிய எந்தத் தேவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கோ அல்லது அரசாங்கத்திற்கோ கிடையாது சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுடன் இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்த சீன அதிபர் விருப்பம்

சிறிலங்காவுடனான இருதரப்பு உறவுகள் மேலும் விரிவாக்கப்படுவதை விரும்புவதாக சீன அதிபர், ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

பிரகீத் கடத்தலில் தொடர்புடைய இராணுவப் புலனாய்வாளர்களை வெலிக்கடையில் சந்தித்தார் மகிந்த

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச சந்தித்துள்ளார்.