பாகிஸ்தான் பிரதமர் ஜனவரி 4 இல் சிறிலங்கா வருகிறார்– 10 உடன்பாடுகளும் கையெழுத்திடப்படும்
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அடுத்த மாதம் 4ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையில் 10 புரிந்துணர்வு உடன்பாடுகளும் கையெழுத்திடப்படவுள்ளன.
சிறிலங்காவில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், பாகிஸ்தான் பிரதமர் கொழும்புக்கு மேற்கொள்ளும் முதலாவது அதிகாரபூர்வ பயணம் இதுவாகும்.
பாகிஸ்தான் பிரதமரின் பயணத்தின் போது, அந்த நாட்டுடன் 10 புரிந்துணர்வு உடன்பாடுகளை செய்து கொள்வதற்கு நேற்றுமுன்தினம் இரவு நடந்த சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.