மேலும்

மாதம்: December 2015

கவலைக்குரிய விடயமாகியுள்ள சிறிலங்காவின் பாதுகாப்பு செலவின அதிகரிப்பு – அனைத்துலக ஊடகம்

சிறிலங்கா அரசாங்கமானது அடுத்த ஆண்டிற்கான பரிந்துரைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தை அண்மையில் வெளியிட்டது. இந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பாகப் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ரோம் பிரகடனத்தில் கையெழுத்திட சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கப்படவில்லையாம்

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்கிய ரோம் பிரகடனத்தில் கையெழுத்திடுமாறு,  சிறிலங்கா அரசாங்கத்துக்கு எந்தவொரு அழுத்தமும் கொடுக்கப்படவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா படையினருக்கு அமெரிக்காவில் பயிற்சி – ஒபாமாவிடம் மைத்திரி கோரிக்கை

சிறிலங்கா படையினருக்கு அமெரிக்காவில் பயிற்சி வழங்குமாறு, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

ரணிலுடன் மகிந்த இரகசியச் சந்திப்பு – மகனைக் காப்பாற்ற மன்றாடினாரா?

சிறிலங்கா  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று இரகசியமாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

புலிகளைத் தோற்கடிக்க அமெரிக்காவும் இந்தியாவும் உதவின – ரணில் ஒப்புதல்

விடுதலைப் புலிகளுடன் கடலில் போரிடுவதற்குத் தேவையான புலனாய்வுத் தகவல்களை அமெரிக்காவும், இந்தியாவும் சிறிலங்கா கடற்படைக்கு வழங்கியதாக தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

இறுதிப்போரில் பங்கெடுத்த தளபதிகளை கைவிடுகிறது அரசு – மகிந்த குற்றச்சாட்டு

இறுதிக்கட்டப் போரில் இராணுவ டிவிசன்களுக்குத் தலைமை தாங்கிய  மூத்த இராணுவ அதிகாரிகள்  பலருக்கு, வழக்கமான சேவை நீடிப்பு வழங்கப்படாததால், அவர்கள் ஓய்வு பெற வேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

ஊடகத்துறை பிரதி அமைச்சராக கருணாரத்ன பரணவிதான நியமனம்

சிறிலங்காவின் நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும், ஊடகத்துறை பிரதி அமைச்சராக கருணாரத்ன பரணவிதான நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று நடந்த நிகழ்வில், அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

பிணையில் விடுவிக்கப்பட்டவர்களும் தண்டிக்கப்படுவர்- என்கிறது சிறிலங்கா அரசு

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நாட்டின் சட்டங்களுக்கு அமைவாக, பிணையில் விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சென்னையில் வடிகிறது வெள்ளம் – 49 சடலங்கள் மீட்பு

சென்னை நகர மக்களைப் பெருந்துயரில் ஆழ்ந்தியுள்ள வெள்ளம் இன்று சற்று வடியத் தொடங்கியுள்ள நிலையில், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

அரசியலமைப்பு வரைவுக்கான அமைச்சரவை உப குழுவில் 4 தமிழ்ப்பேசும் அமைச்சர்கள்

சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான அமைச்சரவை உப குழுவில், இரண்டு தமிழ் அமைச்சர்களும், இரு முஸ்லிம் அமைச்சர்களுமாக, 4 தமிழ்ப்பேசும் அமைச்சர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.