மேலும்

அரசியலமைப்பு வரைவுக்கான அமைச்சரவை உப குழுவில் 4 தமிழ்ப்பேசும் அமைச்சர்கள்

sri-lanka-emblemசிறிலங்காவின் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான அமைச்சரவை உப குழுவில், இரண்டு தமிழ் அமைச்சர்களும், இரு முஸ்லிம் அமைச்சர்களுமாக, 4 தமிழ்ப்பேசும் அமைச்சர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த அமைச்சரவை உபகுழுவை நியமித்துள்ளார்.

இதில் அமைச்சர்கள் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இடம்பெற்றுள்ளனர்.

முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில், அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இந்தக் குழுவில், அமைச்சர்கள் நிமால் சிறிபால டி சில்வா, லக்ஸ்மன் கிரியெல்ல,சுசில் பிரேமஜெயந்த, சம்பிக்க ரணவக்க, விஜேதாச ராஜபக்ச, மலிக் சமரவிக்கிரம ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

சிறிலங்காவின் அரசியலமைப்பை வரைவதற்கான அமைச்சரவை உப குழுவில் இடமளிக்கப்படுவதில்லை. 1972, 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்புகள் தமிழர்களின் பிரதிநிதித்துவம் இன்றியே வரையப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *