உயர்மட்டப் பேச்சுக்களுக்காக சிறிலங்கா வருகிறார் நோர்வே வெளிவிவகார அமைச்சர்
உயர்மட்டப் பேச்சுக்களை நடத்துவதற்காக நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரேன்டே அடுத்தமாதம் முதல் வாரத்தில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
உயர்மட்டப் பேச்சுக்களை நடத்துவதற்காக நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரேன்டே அடுத்தமாதம் முதல் வாரத்தில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்படுவதில் இருந்து அனைத்துக் குடிமக்களையும் பாதுகாப்பது தொடர்பான ஐ.நாவின் அனைத்துலக பிரகடனத்தில் சிறிலங்காவும் கையெழுத்திடவுள்ளது.
தன் மீதான தற்கொலைத் தாக்குதலுக்குத் திட்டமிட்டவர் என்று கூறப்படும் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரை, விடுவிப்பதற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.
இந்தியாவின் முன்னாள் இராணுவத் தளபதி தலைமையில், முன்னாள் இராணுவ அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகள், மற்றும் இராஜதந்திரிகளை உள்ளடக்கிய கொள்கை ஆய்வாளர்கள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தல்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி வரும் மார்ச் மாதம் நடத்தப்படாது என்னும், எனினும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
சிறிலங்கா காவல்துறையின் உதவியுடன் மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள தர்மபுரம் கிராமத்தில் பெருமளவு காணிகள் சிங்களவர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.
சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை நேற்று பிற்பகல் மன்னார் ஆயர் இல்லத்துக்குத் திரும்பினார்.
அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி குடும்பத்தினரும், நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச குடும்பத்தினரும், ஒன்றாக அமெரிக்காவில் சுற்றுலா சென்றதைக் காட்டும் படங்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா.
சிறிலங்கா ஆயுதப்படைகளை தரமுயர்த்துவதற்கு, 6 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்டுகளை வழங்கியுள்ள பிரித்தானியா, இதனைக் கண்காணிக்க புதுடெல்லியில் உள்ள தனது இராணுவ ஆலோசகரை நியமிக்கவுள்ளமை, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்று சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் சீபா எனப்படும், விரிவான பொருளாதார பங்குடமை உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திடாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.