மேலும்

சிறப்பு அதிரடிப்படையின் உதவியுடன் தமிழரின் காணிகளை அபகரிக்கும் ஜே.ஆரின் மகன்

batticaloa-land-grab (3)சிறிலங்கா காவல்துறையின் உதவியுடன் மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள தர்மபுரம் கிராமத்தில் பெருமளவு காணிகள் சிங்களவர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மகன் ரவி ஜெயவர்த்தன மற்றும் சிலராலேயே இந்தக் காணி அபகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தாம் நீண்டகாலமாக குடியிருந்த காணிகளை அபகரித்து வேலிகள் போடப்படுவதாகவும், தமது தென்னை மரங்கள் அழிக்கப்படுவதாகவும் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், காணி அபகரிப்பாளர்களுக்கு சிறப்பு அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்குவதாகவும் அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

batticaloa-land-grab (1)batticaloa-land-grab (2)batticaloa-land-grab (4)batticaloa-land-grab (3)

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்துக்குச் சென்று அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஜே.ஆர்.ஜெனவர்த்தனவின் ஆட்சியின் போது உருவாக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படைக்கு, ரவி ஜெயவர்த்தனவே ஆரம்பத்தில் பொறுப்பாக இருந்தார்.

இந்த நிலையிலேயே சிறப்பு அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் அவர் மட்டக்களப்பில் காணி அபகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *