மேலும்

நம்பகமான பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு 48 வீதமான இலங்கையர்கள் ஆதரவு

Center for Policy Alternatives -CPAபோரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கு, நம்பகமான பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்று, 48.1 வீதமானோர் கருத்துக்கணிப்பு ஒன்றில் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் இந்த கருத்துக்கணிப்பை நடத்தியிருந்தது.

இதில், நம்பகமான பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்து வெளியிட்ட 48.1 வீதமானோரில், பெரும்பான்மையானோர் உள்நாட்டுப் பொறிமுறைக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு பங்களிப்பில்லாத உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைக்கு ஆதரவாக, 43.8 வீதமானோரும், 17.1 வீதமானோர் முற்றிலும் வெளிநாட்டவர்களைக் கொண்டதான விசாரணைப் பொறிமுறைக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்தக் கருத்துக் கணிப்பில் பங்கேற்ற தமிழர்களில், 47.6 வீதமானோர், முற்றிலும் வெளிநாட்டு விசாரணைப் பொறிமுறை அமைக்க வேண்டும் என்றும், 39.7 வீதமானோர், ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்துக்கு அமைய, கலப்பு பொறிமுறை அமைக்க வேண்டும் என்றும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *