மர்மப்பொருள் விண்வெளியில் எரிந்து போனதா?
விண்வெளியில் இருந்து இன்று காலையில் சிறிலங்காவுக்குத் தெற்கேயுள்ள கடற்பகுதியில் விழும் என்று எதிர்பார்க்கப்பட்ட மர்மப்பொருள், இன்னமும் விழவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
விண்வெளியில் இருந்து இன்று காலையில் சிறிலங்காவுக்குத் தெற்கேயுள்ள கடற்பகுதியில் விழும் என்று எதிர்பார்க்கப்பட்ட மர்மப்பொருள், இன்னமும் விழவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை சிறிலங்காவின் தென்பகுதிக் கடலில் விழும் என்ற எதிர்பார்க்கப்படும் மர்மப் பொருளைக் கண்காணிக்க ஐரோப்பிய விண்வெளி முகவர் அமைப்பின் விஞ்ஞானிகளும், இலங்கை விஞ்ஞானிகளும், தயார் நிலையில் உள்ளனர்.
தம்மை பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யக் கோரி, நேற்று நான்காவது நாளாகவும் உண்ணாவிரதத்தை மேற்கொண்ட தமிழ் அரசியல் கைதிகள் பலரின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அவர்கள் முன்னெடுக்கும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், இன்று வடக்கு கிழக்கு பிரதேசங்களில், முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தேசிய அமைப்பாளர் வண.மாதுளுவாவே சோபித தேரரின் உடல் ஆயிரக்கணக்கான பௌத்த பிக்குகள், பொதுமக்களின் கண்ணீருக்கு மத்தியில் சற்று முன்னர் தீயுடன் சங்கமமானது.
சிறிலங்காவில் இரட்டைக் குடியுரிமை பெறுவதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 2000 பேரில், 90 வீதமானோர் சிங்களவர்களே என்று சிறிலங்காவின் உள்நாட்டு விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார்.
அவன் கார்ட் நிறுவனத்தின் செயற்பாடுகளை சிறிலங்கா கடற்படையிடம் கையளிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிடவில்லை என்றும் அதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராயுமாறே அதிகாரிகளை கேட்டுள்ளதாகவும் சிறிலங்காவின் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தெற்கு வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக, சிறிலங்காவிலும் தென்னிந்தியாவிலும் வெள்ள ஆபத்து ஏற்படலாம் என்று காலநிலை தொடர்பான இணையத்தளம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.
விண்வெளியில் இருந்து WTF1190F என்ற மர்மப் பொருள், சிறிலங்காவின் தென்பகுதிக் கடலில் நாளை முற்பகல் விழும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்தப் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.