மேலும்

நான்காவது நாளாக உண்ணாவிரதம் – மருத்துவ சிகிச்சையை அரசியல் கைதிகள் நிராகரிப்பு

தம்மை பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யக் கோரி, நேற்று நான்காவது நாளாகவும் உண்ணாவிரதத்தை மேற்கொண்ட தமிழ் அரசியல் கைதிகள் பலரின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தும்பறைச் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 13 அரசியல் கைதிகளின் உடல் நிலை மோசமடைந்துள்ள போதிலும், அவர்கள் மருத்துவ சிகிச்சையை புறக்கணித்துள்ளனர்.

விஸ்வநாதன் ரமேஷ்குமார், சூரியமூர்த்தி டிரோஷன், தட்சணாமூர்த்தி செல்வகுமார், சுரஞ்சித் கிருஷாந்த பெர்னாண்டோ, சுந்தரமணி சிவகுமார், யோகராஜா, காளியப்பன் மனோகரன், ஆர்.ரூபச்சந்திரன், கணேஸ் புஷ்பராஜா, சர்ஜி விக்கிரமசிங்க, இராசையா தேவராஜா, சுந்தரமணி கிருபானந்தன் ஆகியோரே உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், இவர்கள் மருத்துவ சிகிச்சைகளை நிராகரித்துள்ளனர்.

இதற்கிடையே, வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு நேற்றுச் சென்ற வடக்கு மாகாண அமைச்சர்கள் ஐங்கரநேசன், குருகுலராஜா, டெனீஸ்வரன், சத்தியலிங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சித்தார்த்தன், சாந்தி சிறீஸ்கந்தராஜா, சரவணபவன் ஆகியோரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை சந்தித்துப் பேசினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *