மேலும்

அரசியல் கைதிகள் விடயத்தில் சிறிலங்கா அதிபர் மௌனம் – நாடாளுமன்றில் செல்வம் விசனம்

selvam_adaikalanathanதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான வாக்குறுதி விடயத்தில் சிறிலங்கா அதிபர் இன்று வரை மௌனம் சாதிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விசனம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,

“1983 இல் தமிழ் அரசியல் கைதிகளாக இருந்த குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்டோர் வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டனர்.

இவ்வாறான நிலையிலேயே தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிக ளின் விடுதலை குறித்தும் பேசப்படுகிறது.

அவர்களை விடுதலை செய்யுமாறு கோரி வருகின்றோம். தடுத்து வைக்கப்பட்டிருப்போரும் தமது விடுதலையை வேண்டியே உண்ணாவிர தப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முடி விற்கு கொண்டு வரும் வகையில் தமிழ் அரசி யல் கைதிகளை  நவம்பர் மாதம் 7 ஆம் நாளுக்கு முன்னதாக விடுதலை செய்வதாக சிறிலங்கா அதிபர் அறிவித்தார்.

ஆனாலும் அந்த வாக்குறுதி தொடர்பாக இன்று வரையில் அவர் மெளனமாகவே இருந்து வருவதால், அவர்களின் விடுதலையில் சந்தேகம் எழுந்துள்ளது.

1983இல் தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலை வேண்டி போராட்டங்களை நடத்தி னர்.  எனினும் அவர்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.

இத்தகைய செயற்பாடுகள் பின்னர் விடுதலைப் போராட்டத்திற்கு வழிவகுத்தன. இவ்வாறானதொரு நிலை மீண்டும் உருவாகிவிட புதிய அரசாங்கம் இடமளிக்கக்கூடாது.

நல்லாட்சி ஏற்படுவதற்கு துணையாக நின்ற எமது மக்கள்,  அரசியல் தீர்வு மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை ஆகியவை தொடர்பில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

ஆனால் இன்று இந்த விடயங்கள் இடம்பெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *