மேலும்

குமார் குணரட்ணம் கைது

Kumar Gunaratnamமுன்னிலை சோலிசக் கட்சியைச் சேர்ந்த குமார் குணரட்ணம் இன்று பிற்பகல் கேகாலை மாவட்டத்தில் உள்ள அங்குருவெல என்ற இடத்தில் வைத்து சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

செல்லுபடியான நுழைவிசைவு இல்லை என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே குமார் குணரட்ணம் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜேவிபியின் முன்னாள் உறப்பினரான குமார் குணரட்ணம், 1990களில் துவக்கத்தில் சிறிலங்காவில் இருந்து தப்பிச் சென்று அவுஸ்ரேலியாவில் குடியேறினார்.

அவுஸ்ரேலியக் குடியுரிமை பெற்ற அவர், சிறிலங்காவுக்கு சுற்றுலா நிழைவிசைவில் வந்திருந்த போது, சிறிலங்கா குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தார்.

எனினும், குடிவரவுச் சட்டங்களின் படி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், நுழைவிசைவு காலம் முடிந்த நிலையிலும் சிறிலங்காவில் தலைமறைவாக தங்கியிருந்த குமார் குணரட்ணம், இன்று பிற்பகல் சிறிலங்கா காவல்துறையினரிடம் சிக்கினார்.

அவர், குடிவரவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும், அதன் பின்னர் நாடு கடத்தப்படக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *