மேலும்

மாதம்: October 2015

மர்மப்பொருளால் சிறிலங்காவுக்கு ஆபத்து இல்லை – கலாநிதி சந்தன ஜெயரத்ன

விண்ணில் இருந்து விழும், WTF1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப் பொருளினால் சிறிலங்காவுக்கு எந்த ஆபத்தோ, சேதமோ ஏற்படாது என்று  கலாநிதி சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் உரிமைகளை சிங்களவர்கள் அன்பளிப்பாக கொடுக்கமாட்டார்கள் – எரிக் சொல்ஹெய்ம்

சிறிலங்காவில் தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளை, பெரும்பான்மைச் சிங்களவர்கள் ஒருபோதும் அன்பளிப்பாகத் தரப்போவதில்லை என்று  தெரிவித்துள்ளார் சிறிலங்காவுக்கான நோர்வேயின்,  முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்.

போர்க்குற்ற விசாரணைக்கு தனி நீதிமன்றம் – இன்னமும் தீர்மானிக்கப்படவில்லையாம்

உள்ளகப் பொறிமுறையில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு தனி நீதிமன்றம் அமைக்கப்படுவது தொடர்பாக, தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று, சிறிலங்காவின் அமைச்சரவை இணைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

மெக்சிகோ மாநாட்டில் சிறிலங்கா தொடர்பாக சமந்தா பவர் நிகழ்த்திய உரை

சிறிலங்கா அரசாங்கம் சிவில் அமைப்புக்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும், இது சிறிலங்கா அரசாங்கத்தின் இயங்கியல் மாற்றத்திற்கு மிகவும் அவசியமானது என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

மர்மப்பொருள் அம்பாந்தோட்டைக்கு அப்பால் கடலிலேயே விழும் – ஆர்தர் சி கிளார்க் மையம்

விண்வெளியில் இருந்து வேகமாக வந்து கொண்டிருக்கும், விண்கலம் ஒன்றின் பாகமாக இருக்கலாம் என்று நம்பப்படும், WT1190F எனப் பெயரிடப்பட்டுள்ள, மர்மப்பொருள், அம்பாந்தோட்டைக்கு அப்பால் 100 கி.மீ தொலைவில் கடலிலேயே விழும் என்று ஆர்தர் சி கிளார்க் மையம் அறிவித்துள்ளது.

திறந்த அரசுகளின் கூட்டமைப்பில் இணைந்தது சிறிலங்கா

திறந்த அரசாங்கங்களின் கூட்டமைப்பில் (Open Government Partnership) சிறிலங்காவும் புதிய உறுப்பினராக இணைந்து கொண்டுள்ளது.  மெக்சிகோவில் நேற்று முன்தினம் ஆரம்பமான திறந்த அரசாங்கங்களின் கூட்டமைப்பில், சிறிலங்கா இணைந்து கொள்வதாக, சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச அறிவித்தார்.

சிறைகளில் குற்றச்சாட்டு சுமத்தப்படாத அரசியல் கைதிகள் யாருமில்லையாம்

குற்றச்சாட்டுகளின்றி எவரும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை என்று சிறிலங்காவின் சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோகண புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

கொக்கிளாயில் உயிருடன் கரையொதுங்கிய திமிங்கலத்தை கடலுக்கு விட 8 மணி நேரம் போராட்டம்

முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதியில் மீனவர்களின் வலையில் சிக்கி உயிருடன் கரையொதுங்கிய 70 அடி நீளமான திமிங்கலம் ஒன்று 8 மணிநேர போராட்டத்தின் பின்னர், கடலுக்குள் விடப்பட்டது.

புலிகளின் குண்டு வீச்சில் இருந்து மகிந்தவைப் பாதுகாக்கவே நிலத்தடி வதிவிடம் – என்கிறார் கோத்தா

விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலில் இருந்து சிறிலங்கா அதிபரைப் பாதுகாக்கவே நிலத்தடி வதிவிடம் அமைக்கப்பட்டதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபைக்கு நேரடி உதவி வழங்க முடியாது – அமெரிக்க உயர்அதிகாரி கைவிரிப்பு

வடக்கு  மாகாண மக்களுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், ஆனால் அந்த உதவிகள் சிறிலங்கா அரசாங்கத்தின் வழியாகவே செய்ய முடியும் என்றும், நேரடியாக உதவி செய்ய முடியாது என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள பெண்கள் விவகாரங்களுக்கான தூதுவர் கத்தரின் ருசெல் தெரிவித்துள்ளார்.