மேலும்

மர்மப்பொருளால் சிறிலங்காவுக்கு ஆபத்து இல்லை – கலாநிதி சந்தன ஜெயரத்ன

சிறிலங்கா அருகே விழப்போகும் மர்மப் பொருள்-WT1190F

சிறிலங்கா அருகே விழப்போகும் மர்மப் பொருள்-WT1190F

விண்ணில் இருந்து விழும், WTF1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப் பொருளினால் சிறிலங்காவுக்கு எந்த ஆபத்தோ, சேதமோ ஏற்படாது என்று  கலாநிதி சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக பௌதிகவியல் மூத்த விரிவுரையாளரும், ஆர்தர் சி கிளார்க் மையத்தின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞானத்துறை ஆலோசகருமான கலாநிதி சந்தன ஜெயரத்ன இதுகுறித்து தகவல் வெளியிடுகையில்,

“வானில் இருந்து விழும் பொருள் பெரும்பாலும் வெடித்து, புவி மேற்பரப்பை அடைய முன்னர் எரிந்து விடும். எனவே இதுகுறித்து அச்சமடைய வேண்டிய தேவை இல்லை.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்ற இடத்தில், இந்த மர்மப் பொருள் விழும் என்று எதிர்பார்க்க முடியாது. அது கடைசி நேரத்தில் மாறக் கூடும்.

கடந்த காலங்களில் விண்ணில் இருந்து பொருட்கள் பற்றிய விஞ்ஞானிகளின் எதிர்வுகூறல்கள் மாறியிருக்கின்றன.” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

விண்ணில் இருந்து விழும், WTF1190F எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மர்மப் பொருள், வரும் நொவம்பர் 13ஆம் நாள் அம்பாந்தோட்டைக்குத் தெற்கே 100 கி.மீ தொலைவிலுள்ள கடற்பகுதியில் விழும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *