மேலும்

அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் ரொம் சிறிலங்கா அமைச்சர்களுடன் பேச்சு

Assistant Secretary of State Tom Malinowski -colombo (1)சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி நேற்று சிறிலங்கா அமைச்சர்களுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை வெளிவிவகார அமைச்சின் நேற்று சந்தித்த அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் ஆகிய விவகாரங்கள் குறித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அத்துடன், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று அவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

Assistant Secretary of State Tom Malinowski -colombo (1)

Assistant Secretary of State Tom Malinowski -colombo (2)

Assistant Secretary of State Tom Malinowski -colombo (3)

Assistant Secretary of State Tom Malinowski -colombo (4)

இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த, பரஸ்பர நலன்கள் குறித்த விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்புக்களில், அமெரிக்கா இராஜாங்கத் திணைக்கள உதவிச்செயலர் ரொம் மாலினோவ்ஸ்கியுடன், இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்றும் பங்கெடுத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *