மேலும்

மாதம்: March 2015

சரத் பொன்சேகா – தெற்காசியாவின் நான்காவது பீல்ட் மார்ஷல்

ஜெனரல் சரத் பொன்சேகா தென்காசியப் பிராந்தியத்தில் பீல்ட் மார்ஷலாக, பதவி உயர்த்தப்படும் நான்காவது இராணுவத் தளபதியாக இருப்பார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மகிந்த அரசில் இருந்த நால்வரின் பெயரில் டுபாய் வங்கியில் 2 பில்லியன் டொலர் பதுக்கல்

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்தவர்களால், 2 பில்லியன் டொலருக்கும் அதிகமான கறுப்புப் பணம், டுபாயில் உள்ள வங்கிக் கணக்குகளில் இரகசியமாக வைப்பிலிடப்பட்டுள்ளதாக, விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழில் தேசியகீதம் பாடுவதற்கு அனுமதியோம் – சிங்கள அடிப்படைவாதிகள் போர்க்கொடி

சிறிலங்காவின் அரச தேசிய நிகழ்வுகளில் தமிழ் மொழியில் தேசியகீதத்தை பாடுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று பௌத்தசிங்கள அடிப்படைவாதிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

சிறிலங்காவுடன் பாதுகாப்பு உடன்பாட்டில் கையெழுத்திட வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

சிறிலங்கா அரசாங்கத்துடன் பாதுகாப்பு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடும் நோக்கில், இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் இந்த ஆண்டு நடுப்பகுதியில் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகப் புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்புத் துறைமுக நகர கட்டுமானப் பணியைத் தொடர சிறிலங்கா அமைச்சரவை அனுமதி

சிறிலங்கா அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்ட, கொழும்புத் துறைமுக நகர கட்டுமானத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு, சிறிலங்கா அமைச்சரவை நேற்று அனுமதி அளித்துள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பீல்ட் மார்ஷலாக பதவிஉயர்த்தப்பட்டார் ஜெனரல் சரத் பொன்சேகா

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, வரும் 22ம் நாள் நடைமுறைக்கு வரும் வகையில், பீல்ட் மார்ஷலாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா

சீன ஆதிக்கத்தை முறியடிப்பதற்கான இந்திய மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, சிறிலங்காவின் பௌத்த பீடங்களின் முக்கிய பௌத்த பிக்குகளை புதுடெல்லிக்கு அழைத்து, நாலந்தா மரபு பிக்குகளுடன், பேச்சுக்களை நடத்த இந்திய அரசாங்கம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

இந்திய பாதுகாப்பு மாநாட்டில் விடுதலைப் புலிகள் விவகாரம் – பொன்சேகாவும் பங்கேற்கிறார்

தீவிரவாதம் குறித்த மூன்று நாள் மாநாடு இந்தியாவின் ஜோத்பூர் நகரில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்த மாநாட்டில், விடுதலைப் புலிகள் குறித்த விவகாரமும், ஆய்வுக்குரிய விடயங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரே “13” குறித்து கவனிக்கப்படும் – என்கிறார் சிறிலங்கா அதிபர்

அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டம் தொடர்பான விவகாரம், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரே கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மகிந்தவை அரசியலுக்கு வர மைத்திரி விடமாட்டாராம் – ஐதேக நம்பிக்கை

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால், மீண்டும்  அரசியலுக்கு வரமுடியாது என்று, பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.