மேலும்

ஜெனிவாவுக்கான இந்தியப் பிரதிநிதியாக சையட் அக்பருதீன் நியமனம்

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக சையட் அக்பருதீன் நியமிக்கப்பட்டுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஜெனிவாவில் இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக பொறுப்பேற்கவுள்ள சையட் அக்பருதீன், இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராகப் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெனிவாவில் இந்தியப் பிரதிநிதியாகப் பணியாற்றிய திலிப் சின்கா கடந்த டிசெம்பர் மாதத்துடன் ஓய்வு பெற்றிருந்தார்.

அதன் பின்னர், அந்தப் பதவிக்கு யாரும் நியமிக்கப்படாமல் வெற்றிடமாகவே இருந்து வந்தது.

அடுத்த மாதம் 2ம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்தியா தனது புதிய பிரதிநதியைாக சையட் அக்பருதீனை நியமித்துள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில், சிறிலங்காவுக்கு எதிரான ஐ.நா விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *