மேலும்

பிரதம நீதியரசர் மொகான் பீரிசுக்கு 48 மணிநேர காலக்கெடு

Mohan-Peirisமுன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால், சட்டவிரோதமான முறையில் பதவியில் அமர்த்தப்பட்ட சிறிலங்காவின் பிரதம நீதியரசர் மொகான் பீரிசை பதவி விலகக் கோரி இன்று உயர் நீதிமன்றத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

சுமார் 500 இற்கும் அதிகமான சட்டத்தரணிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டத்தினால், சிறிலங்காவின் பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் இன்று உயர்நீதிமன்றத்துக்கு வரவில்லை.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் பழிவாங்கப்பட்டு, பதவி நீக்கப்பட்ட சிராணி பண்டாரநாயக்கவை மீண்டும், பிரதம நீதியரசராக நியமிக்க வேண்டும் என்று நேற்று சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

protest-mohan-peris

பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் பதவி விலகுவதற்கு, சட்டத்தரணிகள் சங்கத்தினால்  48 மணிநேரம் காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை நடந்த அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்ச தோல்வியைத் தழுவுவதை உணர்ந்து, இராணுவத்தின் உதவியுடன் ஆட்சியைத் தக்க வைக்க மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டத்தின் போது, மொகான் பீரிசும், அலரி மாளிகையில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *