மேலும்

மகிந்தவை படுகுழியில் தள்ளியவரும் சிங்கப்பூருக்கு பயணம்

sumanadasaசிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை முன்கூட்டியே தேர்தலை நடத்த வைத்து, அவர் படுகுழியில் விழக் காரணமானவரான, அவரது சோதிடர் சுமணதாச அபேகுணவர்த்தன சிங்கப்பூருக்குச் சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டது, தேர்தல் நாளை நிர்ணயித்தது, மகிந்த ராஜபக்சவின் வேட்புமனுவுக்கான நேரத்தை தீர்மானித்து, வாக்களிக்கச் செல்வதற்கான நேரத்தை தீர்மானித்தது என எல்லாவற்றையும் மகிந்த ராஜபக்சவின் சோதிடரான சுமணதாசவே மேற்கொண்டிருந்தார்.

மகிந்த ராஜபக்சவுக்கு கடந்த 8ம் திகதி மிகவும் நல்ல நேரம் என்றும், அது அவருக்கு ராஜ யோகத்தை அளிக்கும் என்றும் நம்பிக்கை ஊட்டிய அவரை, மேற்குலக ஊடகங்கள் பலவும், ராஜசோதிடர் என்றே குறிப்பிட்டன.

இவரை மையப்படுத்தி, பிரபல ஊடகங்கள் தேர்தலுக்கு முன்னரும் செய்திகளை வெளியிட்டிருந்தன.

இவரது பேச்சை நம்பி, மகிந்த ராஜபக்ச முன்கூட்டியே தனது பதவியை இழந்துள்ளதையடுத்து. சுமணதாச அபேகுணவர்த்தன சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்றுள்ளார்.

ஊடகங்களும், அரசியல்வாதிகளும், பொதுமக்களும் எழுப்பும் கேள்விகளில் இருந்து தப்பிக்கவே அவர் சிங்கப்பூர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா சென்றடைந்தார் பசில்

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சென்றடைந்துள்ளார்.

நேற்று அதிகாலை எமிரேட்ஸ் விமானம் மூலம், தனது மனைவி புஸ்பா ராஜபக்சவுடன், டுபாய் சென்ற அவர் அங்கிருந்து. லொஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.

தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததையடுத்தே அவர் அமெரிக்கா சென்றுள்ளார்.

மருத்துவ சோதனைக்கே அவர் அங்கு சென்றுள்ளதாக, சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, பசில் ராஜபக்ச வரும் பெப்ரவரி, 20ம் நாள் லொஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, 22ம் நாள் கொழும்பு வரும் வகையில், விமானப்பயணச்சீட்டு பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

basil-us (1)

basil-us (2)

சீனாவுக்கு குடும்பத்துடன் பறந்தார் பந்துல குணவர்த்தன

சிறிலங்காவின் முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவும், இன்று தனது குடும்பத்தினருடன் சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சிறிலங்கன் எயர்லைன்ஸ் யூ.எல் 868 விமானத்தில் அவர் சீனாவுக்கு பயணமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த ராஜபக்சவின் தோல்வியை அடுத்து அமைச்சர்கள், பலரும் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *