மேலும்

27 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்பு

ranil-ministryசிறிலங்காவின் புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு தற்போது சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இடம்பெற்று வருகிறது. புதிய அமைச்சர்கள் 27 பேர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக, பதவிப்பிரமாணம் செய்து வருகின்றனர்.

பாதுகாப்பு அமைச்சராக எவரும் நியமிக்கப்படவில்லை, அதனை அதிபர் மைத்திரிபால சிறிசேனவே தன்வசம் வைத்துள்ளார்.

அமைச்சரவை அந்தஸ்துடைய 27 அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் 10 பேர், பிரதி அமைச்சர்கள் 8 பேர் இன்று பதவியேற்கின்றனர்.

புதிய அமைச்சர்களின் விபரங்கள் –

ரணில் விக்கிரமசிங்க – கொள்கை அமுலாக்க, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்

ஜோன் அமரதுங்க-  சட்டம் ஒழுங்கு மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர்

மங்கள சமரவீர- வெளிவிவகார  அமைச்சர்

கரு ஜயசூரிய- புத்தசாசன அமைச்சர்

ஜோசப் மைக்கல் பெரேரா- உள்நாட்டு விவகார அமைச்சர்

காமினி ஜயவிக்கிரம பெரேரா- உணவு பாதுகாப்பு அமைச்சர்

லக்ஸ்மன் கிரியெல்ல- பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்

ரவி கருணாநாயக்க- நிதி அமைச்சர்

ரவூப் ஹக்கீம் – நகர்புற அபிவிருத்தி, நீர்வளத்துறை அமைச்சர்

சம்பிக்க ரணவக்க – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்

ராஜித சேனாரத்ன- சுகாதார அமைச்சர்

துமிந்த திசநாயக்க- நீர்ப்பாசன அமைச்சர்

கபீர் ஹாசிம்- நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்

எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன- காணி அமைச்சர்

சஜித் பிரேமதாச- வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர்

விஜேதாச ராஜபக்ச- நீதி அமைச்சர்

ஜயந்த கருணாதிலக- ஊடகத்துறை அமைச்சர்

அர்ஜூன ரணதுங்க – துறைமுக அமைச்சர்

ரிசாத் பதியுதீன்- கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்

அகிலவிராஜ் காரியவசம்- கல்வி அமைச்சர்

டி.எம்.சுவாமிநாதன்- மீள்குடியேற்ற, இந்து மதவிவகார அமைச்சர்

ரஞ்சித் மத்துமபண்டார- போக்குவரத்து அமைச்சர்

தலதா அத்துகோரள- வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்

சந்திராணி பண்டார- பெண்கள் விவகார அமைச்சர்

பி.திகாம்பரம்- தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர்

நவீன் திசநாயக்க- சுற்றுலாத்துறை அமைச்சர்

பி.ஹரிசன்- சமூகசேவைகள் மற்றும் நலன்புரி அமைச்சர்

ranil-ministry

இராஜாங்க அமைச்சர்கள்

நந்தமித்ர ஏக்கநாயக்க- கலை, கலாசார இராஜாங்க அமைச்சர்

பைசர் முஸ்தபா- விமான போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்

பாலித ரங்க பண்டார- மின்வலு மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்

துலிப்வெதே ஆராச்சி- மீன்பிடி இராஜாங்க அமைச்சர்

ரோசி சேனாநாயக்க – சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்

பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க – உயர்கல்வி இராஜாங்க அமைச்சர்

ருவன் விஜேவர்தன- பாதுகாப்பு  இராஜாங்க அமைச்சர்

நிரோஷன் பெரேரா- இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர்

கே.வேலாயுதம்- பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க  அமைச்சர்

வீ. இராதாகிருஸ்ணன்- கல்வி இராஜாங்க அமைச்சர்

பிரதி அமைச்சர்கள்

சம்பிக பிரேமதாச- கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர்

ஹர்ச டீ சில்வா- நிதி விவகாரங்கள் மற்றும் கொள்கை செயல்படுத்தல் பிரதி அமைச்சர்

ஹெரான் விக்கிரமரத்ன- நெடுஞ்சாலை மற்றும் முதலீட்டு பிரதி அமைச்சர்

சுஜீவ சேனசிங்க- பிரதி நீதி அமைச்சர்

வசந்த சேனாநாயக்க – சுற்றாடல் துறை பிரதி அமைச்சர்

விஜயகலா மகேஸ்வரன்- பெண்கள் விவகார பிரதி அமைச்சர்

அஜித் பி.பெரேரா- வெளிவிவகார பிரதி அமைச்சர்

அனோமா கமகே- நீர்ப்பாசன பிரதி அமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *