மேலும்

அசோக வடிகமங்காவவும், மைத்திரியுடன் இணைந்தார்

Ashoka Wadigamangawaஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமேல் மாகாணசபை உறுப்பினரான அசோக வடிகமங்காவ, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேவுடன் இணைந்து கொண்டுள்ளார்.

சிறிலங்கா அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், வடமேல் மாகாணசபையில் இருந்து எதிரணிக்குத் தாவிய முதலாவது, ஆளும்கட்சி உறுப்பினர் இவராவார்.

முன்னர் ஐதேகவில் இருந்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குத் தாவிய, அசோக வடிகமங்காவ, வடமத்திய மாகாண சபை அமைச்சராகவும் பதவி வகித்தவராவார்.

வடமத்திய மாகாணசபை முதலமைச்சர் பதவிக்கு இவர் போட்டியில் நிறுத்தப்படலாம் என்று முன்னர் எதிர்பார்ப்பு நிலவியது.

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு இன்னமும், பத்து நாட்களே உள்ள நிலையில், எதிரணியின் பக்கம் கட்சி தாவும் ஆளும்கட்சி அரசியல் வாதிகளின் எண்ணிககை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *