மேலும்

Archives

சிறிலங்காவில் தொடரும் சித்திரவதைகளை அம்பலப்படுத்துகிறார் பிரான்சிஸ் ஹரிசன்

அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பிரான்சிஸ் ஹரிசன் பணியாற்றி வருகிறார். இவர் சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக நூல் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தால் வெளியிடப்பட்ட புதிய அறிக்கை தொடர்பாக பிரான்சிஸ் ஹரிசன்  The Diplomat ஊடகத்திற்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு – சீன நிறுவனத்துடன் சிறிலங்கா கைச்சாத்து

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 70 வீத உரிமையை சீனாவின் மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு வழங்கும் உடன்பாடு இன்று கொழும்பில் கையெழுத்திடப்பட்டது.

சம்பந்தனிடம் விடைபெற்றார் கனடியத் தூதுவர் ஷெல்லி வைற்றிங்

கனடாவுக்கான சிறிலங்கா தூதுவர் பதவியில் இருந்து விலகிச் செல்லும், அம்மையார் நேற்றுக்காலை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்து விடைபெற்றுக் கொண்டார்.

கொழும்பு வந்த ‘சயுரால’ போர்க்கப்பலுக்கு பெரும் வரவேற்பு

இந்தியாவின்  கோவா கப்பல் கட்டும் தளத்தில் சிறிலங்கா கடற்படைக்காக கட்டப்பட்ட ‘சயுரால’ என்ற ஆழ்கடல் ரோந்துப் படகு இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றார் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர

சிறிலங்கா இராணுவத்தின் 51 ஆவது தலைமை அதிகாரியாக (Chief of Staff) மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, இன்று பதவியேற்றுக் கொண்டார்.

அமெரிக்க தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் சிறிலங்கா பாதுகாப்பு செயலருடன் சந்திப்பு

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இராணுவ ஆலோசகராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள லெப்.கேணல் டக்ளஸ் ஹெஸ் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கப்பலில் அகதிகள் கடத்தப்பட்ட வழக்கு – 4 தமிழர்களையும் விடுவித்தது கனேடிய உயர்நீதிமன்றம்

எம்.வி.ஓசன் லேடி கப்பலில் இலங்கை தமிழ் அகதிகளை கனடாவுக்கு ஏற்றி வந்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட நான்கு தமிழர்களும், குற்றவாளிகள் இல்லை என்று பிரிட்டிஷ் கொலம்பிய உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆசிய நோபல் பரிசான ராமன் மக்சாசே விருதைப் பெறுகிறார் இலங்கைத் தமிழ்ப் பெண்

ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் ராமன் மக்சாசே விருதுக்கு 82 வயதுடைய இலங்கைத் தமிழ்ப் பெண் சமூக செயற்பாட்டாளரான கெத்சி சண்முகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை –  இந்திய ஒப்பந்தம் 30 ஆண்டு: தோற்றது ஒப்பந்தமா ? இந்தியாவின் பாதுகாப்பா ?

இந்திய – இலங்கை ஒப்பந்தம் 30 ஆண்டினை எட்டியிருக்கும் நிலையில்,  தோற்றது ஒப்பந்தமா அல்லது இந்தியாவின் பாதுகாப்பா என்ற பேசு பொருளில் கருத்தரங்கம் ஒன்று தமிழ்நாட்டில் இடம்பெறவுள்ளது.

எரிபொருள் விநியோகத்தை கையில் எடுத்தது சிறிலங்கா இராணுவம்

சிறிலங்காவின் பெற்றோலியக் கூட்டுத்தாபனப் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை அடுத்து, கொலன்னாவ எண்ணெய்க் களஞ்சியத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள சிறிலங்கா இராணுவத்தினர் எரிபொருள் விநியோகப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.