மேலும்

Archives

‘தமிழர் தளம்’ – தாயகத்தில் இருந்து வெளிவரும் புதிய ‘மாதமிருமுறை இதழ்’

தமிழர் தளம் எனும் பெயரில் தாயகத்திலிருந்து புதிய ‘மாதமிருமுறை இதழ்’ வெளிவர ஆரம்பித்துள்ளது.  இதன் முதலாவது இதழ், கடந்த 20.08.17 அன்று நல்லூர் தேர்த்திருவிழாவில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளது.

இலட்சக்கணக்கான பக்தர்களின் மத்தியில் தேரேறி வந்த நல்லைக் கந்தன் (படங்கள்)

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று காலை இலட்சக்கணக்கான அடியார்கள் புடைசூழ மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

இந்தியாவின் தென்பிராந்திய இராணுவத் தளபதி கோப்பாயில் இறந்த தனது சகாவுக்கு அஞ்சலி

இந்தியாவின் தென்பிராந்திய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் பி.எம்.ஹரிஸ் இன்று கோப்பாயில் அமைந்துள்ள இந்திய இராணுவ அதிகாரியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க முடியாது – திலக் மாரப்பன

போர்க்குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு, சிறிலங்காவின் அரசியலமைப்பில் இடமில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

புலித்தேவனின் கடைசி தொலைபேசி அழைப்பு – பேசாமல் தட்டிக் கழித்தார் எரிக் சொல்ஹெய்ம்?

போரின் இறுதிக்கட்டத்தில், 2009ஆம் ஆண்டு மே 17ஆம் நாள், விடுதலைப் புலிகளின் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவனிடம் இருந்து, தமக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், ஆனால் தாம் அவருடன் நேரடியாகப் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார் எரிக் சொல்ஹெய்ம்.

பாலச்சந்திரன் சிறிலங்கா படையினராலேயே படுகொலை செய்யப்பட்டார் – எரிக் சொல்ஹெய்ம்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், சிறிலங்கா படையினரால் பிடிக்கப்பட்டே படுகொலை செய்யப்பட்டார் என்று தாம் வலுவாக சந்தேகிப்பதாகவும், இது ஒரு மோசமான தீய செயல் என்றும் தெரிவித்துள்ளார் எரிக் சொல்ஹெய்ம்.

பிரபாகரனுடன் அதிக நேரத்தைச் செலவிட முடியவில்லை – வருந்துகிறார் எரிக் சொல்ஹெய்ம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் அதிக நேரத்தைச் செலவிட முடியாமல் போனதற்காக வருந்துகிறேன் என்று, சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா சிறிலங்கா கடற்படைத் தளபதியாக நியமனம்

சிறிலங்கா கடற்படைத் தளபதியாக றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று காலை 9.30 மணியளவில், நடந்த நிகழ்வில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து,  றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.

சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புக் கருத்தரங்கு வரும் 28ஆம் நாள் ஆரம்பம்

சிறிலங்கா இராணுவம் நடத்தும் அனைத்துலகப் பாதுகாப்புக் கருததரங்கான,  7 ஆவது கொழும்பு  பாதுகாப்பு கருத்தரங்கு-2017  வரும், 28ஆம், 29ஆம் நாள்களில் நடைபெறவுள்ளது.

ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர், சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் சந்திப்பு

சிறிலங்காவுக்கான ரஷ்ய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேணல் டிமிற்றி ஏ மிக்கெலோவ்ஸ்கி சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.