மேலும்

Tag Archives: சட்டமா அதிபர்

ஜெனிவாவில் நாளை சிறிலங்கா குறித்த மதிப்பீடு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நடைபெறும் பூகோள கால மீளாய்வு கூட்டத்தொடரில் நாளை சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்த மதிப்பீடுகள் இடம்பெறவுள்ளன.

கருணாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

அரசாங்க வாகனத்தை தவறாகப் பயன்படுத்தினார் என்று குற்றச்சாட்டி முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

விசாரணையைத் தவிர்க்கவே உண்ணாவிரதமாம் – அனுராதபுர சிறைக் கண்காணிப்பாளர் அறிக்கை

நீதிமன்ற விசாரணைகளைத் தவிர்க்கவே, அனுராதபுர சிறைச்சாலையில் மூன்று அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்பதாக, சிறைச்சாலை கண்காணிப்பாளர் அனுராதபுர மேல் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்ட வழக்குகள் விரைவில் முடிவுக்கு வரும் – சட்டமா அதிபர் உறுதிமொழி

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரான வழக்குகளை துரிதப்படுத்துவதற்கு, சட்டமபா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என்று சிறிலங்கா அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

பதவி விலகவுள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி விரைவில் தனது பதவியில் இருந்து விலகுவார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வித்தியா கொலை வழக்கு யாழ்ப்பாணத்திலேயே விசாரணை – மூன்று நீதிபதிகளும் நியமனம்

புங்குடுதீவில் மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டு வன்புணர்வுக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட தீர்ப்பாயத்தின் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன?

சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலராக மூத்த மேலதிக அரச சட்ட ஆலோசகர் கபில வைத்தியரத்ன நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரோம் பிரகடனத்தில் சிறிலங்கா கையெழுத்திட வேண்டும் – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக இல்லாதொழிக்குமாறும், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் பிரகடனத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், சிறிலங்கா அரசாங்கத்திடம், ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ஜுவான் மென்டஸ் வலியுறுத்தியுள்ளார்.

ரவிராஜ் கொலை சந்தேகநபர்களை கைது செய்ய சட்டமா அதிபர் அனுமதிக்கவில்லை – சிஐடி

நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் மற்றும் அவரது மெய்க்காவலர் ஆகியோர் கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட வழக்குடன் தொடர்புடைய இரண்டு முக்கிய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு சட்டமா அதிபர் அனுமதி அளிக்கவில்லை என்று சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

அதிரடிப்படை முன்னாள் கட்டளைத் தளபதி கைது – சிறிலங்கா அதிபர் அதிருப்தி

சிறிலங்கா காவல்துறை சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரியான பிரதி காவல்துறை மா அதிபர் கே.எல்.என்.சரத்சந்திர கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிருப்தி வெளியிட்டுள்ளார்.