19வது திருத்தம் குறித்து கருத்து வாக்கெடுப்பு தேவையில்லை – உயர்நீதிமன்றத்தில் சட்டமா அதிபர்
19வது திருத்தச்சட்ட மூலம் நாட்டு மக்களின் இறைமையை உறுதிப்படுத்தும் வகையிலும், ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் அமைந்திருப்பதால், இது தொடர்பாக கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று, சிறிலங்கா சட்டமா அதிபர் யுவாஞ்சன விஜேதிலக நேற்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.