முடிந்தது வாக்களிப்பு – தமிழர் பகுதிகளில் மந்தமான வாக்குப்பதிவு
சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு மாலை 4 மணியுடன் முடிவுக்கு வந்திருக்கிறது.காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்களிப்பு, மாலை 4 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளதையடுத்து, வாக்குப் பெட்டிகளை முத்திரையிட்டு, அவற்றை வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.




