மேலும்

Tag Archives: யாழ்ப்பாணம்

மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவி – ‘எட்டாத பழம் புளிக்கும்’ என்கிறார் சம்பந்தன்

மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவி போன்ற சலுகைகளை சிறிலங்கா அரசாங்கத்திடம் இருந்து பெறுவது அரசியல் தீர்வு என்ற இலக்கைப் பலவீனப்படுத்துவதாக அமையும் என்று கருத்து வெளியிட்டுள்ளார் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

இந்தியத் தளபதி வராததால், அமைதிப்படையினரின் நினைவிடத்தில் துணைத்தூதுவர் அஞ்சலி

இந்திய இராணுவத் தளபதியின் யாழ்ப்பாண வருகை ரத்துச் செய்யப்பட்டதால், இந்திய அமைதிப்படையினருக்கு, அஞ்சலி செலுத்த பலாலியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதுவர் நடராஜன் மட்டும் பங்குபற்றினார்.

இந்திய இராணுவத் தளபதியின் இரகசிய நிகழ்ச்சிநிரல் – இன்று யாழ்ப்பாணம் செல்கிறார்

சிறிலங்காவுக்கான மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக் இன்று யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லவுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தை தரமுயர்த்த உதவுவதாக இந்தியத் தளபதி உறுதி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர்சிங் சுஹக், இன்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா மற்றும், உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சிறிலங்கா பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டார் சமந்தா பவர்

மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வந்திருந்த ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர், இன்று அதிகாலை தனது பயணத்தை முடித்துக் கொண்டு சிறிலங்காவில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

கொழும்பு வந்தார் சமந்தா பவர் – விமான நிலையத்தில் காத்திருந்து வரவேற்றார் மங்கள

ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் மூன்று நாள் பயணமாக இன்று பிற்பகல் சிறிலங்காவை வந்தடைந்தார். புதுடெல்லியில் இருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த, சமந்தா பவரை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வரவேற்றார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முற்றிலும் செயலிழந்தன – முழுஅடைப்பு போராட்டம் வெற்றி

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அழைப்பு விடுக்கப்பட்ட முழு அடைப்பு போராட்டத்தினால், வடக்கு,கிழக்கு மாகாணங்கள் முற்றாகவே செயலிழந்து போயுள்ளன.

ஐ.நா குழுவுடனான சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க தடை

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவுடன் பேசப்பட்ட விடயங்கள் குறித்து, ஊடகங்களிடம் கருத்து வெளியிட வேண்டாம் என்று, காணாமற்போகச் செய்யப்பட்டோரின் உறவினர்களிடம் ஐ.நா கேட்டுக் கொண்டுள்ளது.

அரசியல் கைதிகள் விடுதலைக்கான போராட்டங்களை ஒருங்கிணைக்கத் தவறியது கூட்டமைப்பு

சிறைச்சாலைகளில் உண்ணாவிரதப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்துள்ள அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும், வடக்கு கிழக்குத் தழுவிய போராட்டத்தை நடத்தும் விடயத்தில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் ஒன்றுபடத் தவறியுள்ளன.

‘ரோ’வின் குகையாகி விட்டது யாழ்ப்பாணம் – அனுரகுமார திசநாயக்க குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘ரோ’வின் முகவர்கள் நிறைந்திருப்பதாகவும், வடக்கில் குழப்பத்தை ஏற்படுத்த இவர்கள் முயற்சி செய்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார் ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க.