மேலும்

Tag Archives: மகிந்த ராஜபக்ச

நேபாளம் சென்றடைந்தார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சார்க் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று காலை நேபாளத்தைச் சென்றடைந்தார்.

95 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது வரவு செலவுத் திட்டம் – எதிர்பார்ப்புகள் பொய்யாகின

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால்  சமர்ப்பிக்கப்பட்ட 2015ம் நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

தமிழீழத்தை வழங்குவதாக மேற்குலகுடன் எதிரணி இரகசிய உடன்பாடு – சிறிலங்கா அரசு குற்றச்சாட்டு

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து எதிரணியினர் கூட்டு திட்டம் தீட்டியிருப்பது, அல்ஜசீரா தொலைக்காட்சிக் கலந்துரையாடல் மூலம் அம்பலமாகியுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.

தோல்வியுற்றால் மகிந்த மீது போர்க்குற்ற விசாரணை – அல்ஜசீரா விவாதத்தில் கருத்து

அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியைத் தழுவினால், போர்க்குற்றச்சாட்டுகளுக்காக, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்று உலகத் தமிழர் பேரவையின் மூலோபாய முயற்சிகளுக்கான பணிப்பாளர் சுரேன் சுரேந்திரா தெரிவித்துள்ளார்.

மகிந்தவுக்கு கொடுத்த ஆதரவை மறுபரிசீலனை செய்யும் கூட்டணிக் கட்சிகள்

சிறிலங்காவில் வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக எதிரணி அறிவித்துள்ள நிலையில், ஆளும்கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் தமது முன்னைய முடிவுகளை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளன.

பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இன்று மாலை 5 மணி

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று பெருமெடுப்பிலான கட்சித் தாவல் இடம்பெறலாம் என்று ஊடகங்கள் வெளியாகியுள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள இறுதி வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விலகிச் சென்றவர்கள் பற்றிய ஆவணங்கள் கையில் உள்ளதாம் – மிரட்டுகிறார் மகிந்த

சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து விலகிச் சென்றவர்கள் பற்றிய ஆவணக் கோப்புகள் தன்னிடம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.

“ஐயோ சிறிசேன” – புலம்புகிறார் மகிந்த

மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சிகளின் பொறியில் விழுந்து விட்டதாகவும், 2010ம் ஆண்டு சரத் பொன்சேகா விழுந்த பொறியில் இப்போது அவர் விழுந்துள்ளார் என்றும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரத்துக்குள் அமைச்சரவை மாற்றம் – கட்சி தாவல்களைத் தடுக்க அவசர நடவடிக்கை

அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதால், அடுத்தவாரம் அமைச்சரவையை மாற்றியமைக்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் துறவறத்தை முடித்தார் சந்திரிகா – மைத்திரிபாலவை தலைவராக்குவேன் எனச் சூளுரை

மைத்திரிபால சிறிசேனவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக்குவேன். அதுவரை இந்தப் போராட்டம் ஓயாது என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க சூளுரைத்துள்ளார்.