மேலும்

Tag Archives: மகிந்த ராஜபக்ச

மைத்திரிபால உள்ளிட்ட 3 அமைச்சர்களை பதவிநீக்கினார் மகிந்த

எதிரணியின் பொது வேட்பாளராகப் போட்டியிடவுள்ள மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட மூன்று அமைச்சர்களை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உடனடியாகப் பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.

போர் தொடங்கி விட்டது – ராஜித சேனாரத்ன

நிறைவேற்று அதிகாரத்துக்கு எதிரான போர் தொடங்கி விட்டது என்று மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அலரி மாளிகையில் அவசர கூட்டம் – மகிந்த ராஜபக்ச அழைப்பு

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அவசர கூட்டம் ஒன்றுக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

மகிந்தவைச் சந்தித்தார் மைத்திரிபால சிறிசேன – கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளராக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், அவர் இன்று காலை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசியுள்ளார்.

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன?

சிறிலங்காவில் வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில்,  சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன நிறுத்தப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு பிரகடனத்தில் ஒப்பமிட்டார் மகிந்த

சிறிலங்காவில் அடுத்த அதிபர் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் கையெழுத்திட்டுள்ளார். (3ம் இணைப்பு)

சிறிலங்கா அதிபர் தேர்தல் அறிவிப்பு – 1.30 மணிக்கு வெளியாகும்

அடுத்த சிறிலங்கா அதிபர் தேர்தல் பற்றிய அறிவிப்பு  இன்று பிற்பகல் 1.30 மணிக்கு  வெளியாகும் என்று, சிறிலங்கா அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். (2ம் இணைப்பு)

இன்று நண்பகலுக்குப் பின்னர் தேர்தல் அறிவிப்பு – உறுதிப்படுத்தினார் பசில்

அடுத்த அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிவிப்பு நள்ளிரவு வெளியாகவில்லை – சிறிலங்கா அரசுக்குள் இழுபறி

அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் நேற்று நள்ளிரவு வெளியிடப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று வெளியாகும்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று அடுத்த அதிபர் தேர்தலுக்கான முறைப்படியான அறிவிப்பை வெளியிடுவார் என்று  கொழும்பு அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.