மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறியது மாகாணசபை தேர்தல்கள் திருத்தச்சட்டம்
மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
பங்களாதேஷ் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கூட்டு அரசாங்கத்தில் பிளவுகளை ஏற்படுத்தக் கூடிய- சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ள புதிய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறார்.
புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு 6.2 மில்லியன் மக்கள் தற்போதைய அரசாங்கத்துக்கு ஆணை வழங்கியுள்ளனர் என்று ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
போர் உதவி வசதிகளுடன் தொடர்புடைய இரகசிய உடன்பாடு ஒன்றை அமெரிக்காவுடன், செய்து கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சிப்பதாக ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணாமற்போனோர் பணியகம் தொடர்பான சட்டத்தின் சில அம்சங்கள் குறித்து கரிசனை வெளியிட்டு, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை சிறிலங்கா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் வலயம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு இன்று நடைபெறவுள்ள நிலையில், அம்பாந்தோட்டையில் பேரணிகள், கூட்டங்களை நடத்துவதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் நேற்றுக்காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை அவசரமாகச் சந்தித்து, அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக கவலை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தின், 2007ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம், 107 மேலதிக வாக்குகளினால் இன்று மாலை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட மதிப்புக்கூட்டு வரி திருத்தச் சட்டம் 66 மேலதிக வாக்குகளால் நேற்று நாடாளுமன்றத்தில், நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் தீர்மானத்தை நிறைவேற்றும் நடவடிக்கை வரும் 12ஆம் நாள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.