மேலும்

Tag Archives: கடற்படை

அமெரிக்க கடற்படையுடனான போர்ப்பயிற்சியில் சிறிலங்கா கடற்படைப்படகு கவிழ்ந்தது

அமெரிக்க கடற்படையினருடன் கூட்டுப் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படைப் படகு ஒன்று, திருகோணமலைக் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சிறிலங்கா கடற்படைச் சிப்பாய் ஒருவர் பலியானார்.

சிறிலங்காவுடன் நிலையான இராணுவ உறவை விரும்புகிறதாம் சீனா

சிறிலங்காவுடன் தொடர்ச்சியானதும் நிலையானதுமான இராணுவ உறவுகள் தொடர வேண்டும் என்று சீனப் பாதுகாப்பு அமைச்சர் சாங் வான்குவான் தெரிவித்துள்ளார்.

தமிழ் இளைஞர்கள் கடத்தலுடன் கடற்படையினருக்குத் தொடர்பு – நீதிமன்றத்தில் சிஐடி அறிக்கை

கொழும்பில் 2008ம் ஆண்டு, ஐந்து தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவத்துடன் சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் சிலர் தொடர்புபட்டுள்ளதாக, கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

மாத்தறை அணிவகுப்பில் மைத்திரி மீது கல்வீச திட்டம்?- இரு கடற்படையினர் கைது

மாத்தறையில் நேற்று முன்தினம் நடந்த போர்வீரர்கள் நினைவு அணிவகுப்பின் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் மீது கல் வீசத் திட்டமிட்டார் என்ற சந்தேகத்தில் இரண்டு கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோத்தாவுக்கு எதிராக அடுத்தடுத்துப் பாயவுள்ள குற்றவியல் வழக்குகள்

முறைகேடான வகையில் ஆயுதங்கள் மற்றும் போர்த்தளபாடக் கொள்வனவுகளில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக, குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பில் அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் – புதிய அரசுடன் உறவை வலுப்படுத்த முயற்சி

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன், ஆட்கடத்தல்களைத் தடுத்தல் தொடர்பான பேச்சுக்களை நடத்துவதற்காக, அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் பீற்றர் டட்டன் கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

மற்றொரு கேந்திர நிலையை இழக்கப் போகிறது சிறிலங்கா இராணுவம் – அலறுகிறார் வசந்த பண்டார

இந்திய அரசாங்கத்தின் ஆணையின் பேரில், சிறிலங்கா விமானப்படை வசம் உள்ள பலாலி விமான நிலையத்தை, சிவில் விமான நிலையமாக்க முயற்சிகள் நடப்பதாகவும், அவ்வாறு மாற்றப்பட்டால், சிறிலங்கா இராணுவம் வடக்கில் மற்றொரு கேந்திர நிலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், தேசிய அமைப்புகளின் ஒன்றியம் எச்சரித்துள்ளது.

யேமன் மீட்பு நடவடிக்கை – சீனாவுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு

சீன மக்கள் விடுதலை கடற்படை இராணுவத்தின் மனிதாபிமான நடவடிக்கைகளை கோடிட்டுக்காட்டும் போது, சீனாவானது பூகோள இராணுவப் பிரசன்னம் அனைத்துலகிற்கு நலன் பயப்பதாக நியாயப்படுத்துகிறது.

சம்பூரில் ஏப்ரல் இறுதிக்குள் 579 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்படுவர் – ஒஸ்ரின் பெர்னான்டோ

திருக்கோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பூரில், இருந்து இடம்பெயர்ந்த 579 குடும்பங்கள், ஏப்ரல் மாத இறுதிக்குள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியர்த்தப்படுவர் என்று கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

சீனாவின் தலையீடுகள் அதிவேகமாக அதிகரிப்பு – இந்திய கடற்படைத் தளபதி கவலை

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் நடவடிக்கைகள் அதிவேகமாக அதிகரித்து வருவதாக இந்தியப் கடற்படைத் தளபதி அட்மிரல் ரொபின் டோவன் கவலை வெளியிட்டுள்ளார்.