மேலும்

Tag Archives: அமெரிக்கா

எவ்பிஐ சிறப்புக் குழு சிறிலங்கா அனுப்பப்படவில்லை- அமெரிக்க தூதரகம்

சிறிலங்கா திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் இணையவழித் திருட்டு மற்றும் அமெரிக்க அஞ்சல் அதிகாரிகளுக்குச் செலுத்த வேண்டியிருந்த மேலும் 625,000 டொலர் திருட்டு ஆகியவற்றை விசாரிப்பதற்காக, எவ்பிஐ  சிறப்புக் குழுவினர் யாரும் சிறிலங்காவிற்கு அனுப்பப்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கொழும்பில் விசாரணைகளை தொடங்கியது எவ்பிஐ

சிறிலங்கா திறைசேரியில் இருந்து அவுஸ்ரேலியாவிற்கு அனுப்பப்பட்ட  2.5 மில்லியன் டொலர்கள் மற்றும் அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டிய 625,000டொலர்கள் இணையவழியில்  திருடப்பட்டது குறித்த விசாரணைகளுக்கு உதவ, எவ்பிஐ அதிகாரிகள் சிறிலங்கா வந்துள்ளனர்.

போரின் போது கொழும்பு, காலியில் ஆயுதக் களஞ்சியங்களை நிறுவியிருந்தது சீனா

போரின் இறுதிக் கட்டத்தில் சிறிலங்காப் படைகளுக்குத் தேவையான ஆயுதங்களை வழங்குவதற்காக,  கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களில் சீனா களஞ்சியங்களை நிறுவியிருந்ததாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இணைய வழி மோசடிகளை தடுப்பது குறித்து இந்தியா- சிறிலங்கா இடையே பேச்சு

எதிர்காலத்தில் இணையவழித் திருட்டு அச்சுறுத்தல்களை முன்கூட்டியே தடுக்கும் விடயத்தில் ஒத்துழைப்பது குறித்து சிறிலங்காவும்,  இந்தியாவும்  பேச்சுக்களைத்  தொடங்கியுள்ளன.

திறைசேரியில் திருடப்பட்ட நிதியின் ஒருபகுதி அமெரிக்க வங்கியில் கண்டுபிடிப்பு

நிதி அமைச்சின் கணினி அமைப்பில்  ஊடுருவி, திருடப்பட்ட திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலரில் ஒரு பகுதி, அமெரிக்காவின் டெலாவேர் மாநிலத்தில் உள்ள ஒரு வங்கிக் கணக்கிற்குச் சென்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக  மூத்த காவல்துறை  அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

திறைசேரி நிதி மோசடி- அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவின் உதவியும் கோரப்பட்டது

திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திருடப்பட்டது குறித்த  விசாரணையை விரிவுபடுத்தும் வகையில், சிறிலங்கா புலனாய்வாளர்கள் அமெரிக்காவின் எவ்பிஐ எனப்படும் மத்திய புலனாய்வுப் பணியகத்தின் உதவியை நாடியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அருகே ஈரானிய மசகு எண்ணெயுடன் சென்ற கப்பலை மடக்கியது அமெரிக்கா

ஈரானிய மசகு எண்ணெயைக் கடத்தியதற்காக, முன்னர் தடை செய்யப்பட்ட எண்ணெய் கப்பல் ஒன்றை, சிறிலங்காவுக்கு அருகே,  அமெரிக்க படைகள் இடைமறித்துக் கைப்பற்றியுள்ளன.

போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஈரானிய படையினரை திருப்பி அனுப்பினோம்

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான  போர்நிறுத்தம், சிறிலங்கா தனது நடுநிலையைக் கைவிடாமல், போரிடும் தரப்பினருடனான நட்புறவைப் பாதிக்காமல் அனைத்துலக சட்டத்தின் கீழ்  கடமைகளை நிறைவேற்ற அனுமதித்துள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார  அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மீதான தடைக்கு விலக்கு கோரிய சிறிலங்கா – இன்னமும் பதிலளிக்காத அமெரிக்கா

ரஷ்யாவிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு விலக்குப் பெறுவதற்காக சிறிலங்கா விடுத்த கோரிக்கைக்கு, அமெரிக்கா இன்னமும் பதிலளிக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவுடன் நீண்டகால எரிசக்தி உடன்பாட்டை எதிர்பார்க்கும் ரஷ்யா

சிறிலங்காவும் ரஷ்யாவும் நீண்டகால எரிசக்தி விநியோகம் தொடர்பான ஒரு உடன்பாட்டிற்கு  வர முடியும் என ரஷ்யாவின் பிரதி வெளியுறவு அமைச்சர் அன்ட்ரே ருடென்கோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.