மேலும்

முன்னாள் போராளிகள் இருவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

வில்பத்து சரணாலயத்தில், எட்டு சிறிலங்கா படையினரைக் கொன்றார்கள் என குற்றம்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் இருவருக்கு 25 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் சிங்கப்பூர் பயணம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நான்கு நாட்கள் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார் என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விரைவில் மீண்டும் பிரதமர் ஆவேன் – மகிந்த சூளுரை

எதிர்க்கட்சித் தலைவர் செயலகத்தில் இருந்து வெளியேறி விரைவில் பிரதமர் செயலகத்துக்குச்  செல்வேன் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்

மோசமான குற்றங்களுடன் தொடர்புடைய 11 சிறிலங்கா படையினருக்கு எதிராக, விரைவில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளமை தொடர்பாக, சிறிலங்கா அதிகாரிகளுக்குத் தகவல்கள் ஏதும் தெரியாது என சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித்  அத்தபத்து தெரிவித்துள்ளார்.

மனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு

ஐ.நா மற்றும் கொமன்வெல்த்துக்கான, பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் தாரிக் அகமட் பிரபுவை சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு

சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, பிரித்தானியாவின் பொதுக் கட்டளைச் சட்டத்தை மீறி குற்றமிழைத்துள்ளார் என்று பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் மஜிஸ்ரேட் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு

சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் இயக்கம் எழுச்சி பெற்ற ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பேணப்பட்டு வந்த 400 இராஜதந்திர கோப்புகளை அழித்திருப்பதாக பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் ஒப்புக்கொண்டுள்ளது.

‘எம்மை ஏன் கைவிட்டீர்கள்?’ – சிறிலங்கா அதிபரிடம் முல்லைத்தீவில் கேள்வி

‘எம்மை ஏன் கைவிட்டீர்கள்’ என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கேள்வி எழுப்பி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று முள்ளியவளையில் போராட்டம் நடத்தினர்.

பளையில் முன்னாள் போராளி கைது

பளை – கரந்தாய் பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர், பயங்கரவாத விசாரணைப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.