மேலும்

பிரிவு: செய்திகள்

சொந்தப் பேனாவினால் புள்ளடியிட்டால் வாக்கு நிராகரிக்கப்படும் – தேர்தல் ஆணையாளர்

வாக்களிப்பு நிலையத்தில் வழங்கப்படும் பேனாவினால் புள்ளடியிடப்படாத வாக்குச் சீட்டுகள் நிராகரிக்கப்படும் என்று சிறிலங்காவின் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எமக்கு புத்திகூற வேண்டாம் – ஐ.நா பேச்சாளர் மீது பாய்கிறது சிறிலங்கா

சிறிலங்கா அதிபர் தேர்தல் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் கருத்தை அவரது பேச்சாளர் மீண்டும் வலியுறுத்தியது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

நாளை வாக்கு எண்ணும் பணி தாமதமாகும் – தேர்தல் ஆணையாளர்

சிறிலங்காவில் நாளை தேர்தல் முடிந்தவுடன், வாக்கு எண்ணும் பணி முன்னர் திட்டமிட்டவாறு மாலை 6 மணிக்கு ஆரம்பமாகாது என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

யார் வென்றாலும் முதலில் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் – பாஜக

நாளை நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர், முதலாவதாக தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று  இந்தியாவை ஆளும் பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.

மகிந்தவைத் தூக்கியெறியும் கொமன்வெல்த் – கொழும்பு ஆய்வாளர் எச்சரிக்கை

நாளை நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், மோசடிகளைச் செய்து வெற்றி பெற முனைந்தால், கொமன்வெல்த் அமைப்பின் தலைமைப் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச தூக்கியெறியப்படும் நிலை உருவாகும் என்று கொழும்பு அரசியல் ஆய்வாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இராணுவத் தலையீடுகளால் வடக்கில் வாக்களிப்பு குறையும் – கண்காணிப்பாளர்கள் அச்சம்

கடுமையான இராணுவப் பிரசன்னம் காரணமாக வடக்கு மாகாணத்தில் குறிப்பாக, யாழ்.மாவட்டத்தில், நாளை நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் வாக்களிப்பு வீதம் குறையலாம் என்று தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் தெரிவித்துள்ளது.

மறுவாக்குப்பதிவு நடத்த தயங்கமாட்டேன் – மைத்திரிக்கு தேர்தல் ஆணையாளர் வாக்குறுதி

 நாளை நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் எவரேனும் தேர்தல் சட்டங்களை  மீறினால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ அல்லது, வன்முறைகள் தொடர்ந்தால் மறுவாக்குப்பதிவை நடத்தவோ தயங்கமாட்டேன் என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் உறுதியளித்துள்ளார்.

தேவைப்பட்டால் பாதுகாப்புக்கு இராணுவத்தை அழைப்போம் – சிறிலங்கா காவல்துறை

நாளை நடக்கவுள்ள அதிபர் தேர்தலின் போது, தேவைப்பட்டால், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கு, சிறிலங்கா இராணுவத்தை அழைப்போம் என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

மகிந்த, மைத்திரி தலைவிதியைத் தீர்மானிக்கவுள்ள 15 மில்லியன் வாக்காளர்கள்

சிறிலங்காவில் நாளை நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்கு, 15 மில்லியன் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக, சிறிலங்கா தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

குருநாகல மாவட்டத்தில் 98 வீத அஞ்சல் வாக்களிப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பில், குருநாகல மாவட்டத்தில் அதிகபட்சமாக, 98 வீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக, மாவட்ட அரசாங்க அதிபர் எச்.எம்.பி.ஹிதிசேகர தெரிவித்துள்ளார்.