மேலும்

தேவைப்பட்டால் பாதுகாப்புக்கு இராணுவத்தை அழைப்போம் – சிறிலங்கா காவல்துறை

ajith-rohanaநாளை நடக்கவுள்ள அதிபர் தேர்தலின் போது, தேவைப்பட்டால், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கு, சிறிலங்கா இராணுவத்தை அழைப்போம் என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

தேர்தல் பாதுகாப்புப் பணியில் 70 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தேர்தல் நாளன்றும், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னரும், 65 ஆயிரம் காவல்துறையினரும், 5 ஆயிரம் சிறப்பு அதிரடிப்படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவர்.

நீதியான, நியாயமான முறையில் தேர்தல் நடப்பதற்கு, அரசியல் கட்சிகளும், ஏனைய எல்லாத் தரப்பினரும், தேர்தல் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும்.

எல்லா சுவரொட்டிகள், பதாதைகளும், அகற்றப்பட வேண்டும். தேர்தல் சட்டங்களை மீறுவோர் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, வாக்குகளை எண்ணும் நிலையத்துக்கு வெளியே, சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சிறப்பு அதிரடிப்படையினரும் நிறுத்தப்படுவர்.

தேவைப்பட்டால் இராணுவத்தின் உதவியும் கோரப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தேர்தலில் சிறிலங்கா காவல்துறையின் முழுமையான ஒத்துழைப்பும் பெறப்படும் என்றும், இராணுவம் பணியில் ஈடுபடுத்தப்படாது என்றும் சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய நேற்று முன்தினம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *