மேலும்

பிரிவு: செய்திகள்

பிள்ளையானை கூண்டுக்குள் அனுப்பிய அருண் ஹேமச்சந்திரா?

வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் உறவினர் ஒருவர் அளித்த முறைப்பாட்டுக்கு அமையவே, பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்கா செல்கிறது சிறிலங்காவின் உயர்நிலைக் குழு

அமெரிக்க அரசின் வர்த்தக பிரதிநிதிகளுடன் நேரடியான பேச்சுக்களை  நடத்துவதற்கு சிறிலங்காவின் உயர்மட்டக் குழு அடுத்த வாரம் அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை உண்மையாகக் கையாள வேண்டும்

சிறிலங்காவுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை,அரசாங்கம் உண்மையாகக் கையாள வேண்டும் என்று முன்னாள் சபாநாயகரும், சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜெயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்காவில் ஒரு இலட்சம் வேலைகள் பறிபோகும் ஆபத்து

அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையின் விளைவாக, சிறிலங்காவில், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வேலைகள் இழக்கப்படும் அபாயம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.

விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட காணிகளில் இராணுவ வேலி

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில், சிறிலங்கா படையினரின் நீண்டகால ஆக்கிரமிப்பில் இருந்த காணிகள்,  விவசாய நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதும், அந்தக் காணிகளை சிறிலங்கா படையினர் தொடர்ந்தும் தமது கண்காணிப்பில் வைத்துள்ளதால் உரிமையாளர்கள் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

18 உள்ளூராட்சி சபைகளில் அஞ்சல் வாக்களிப்பு தாமதம்.

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 18 உள்ளூராட்சி சபைகளுக்கான, அஞ்சல் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பிள்ளையானுடன் பேச ரணிலுக்கு தடை – கம்மன்பிலவுக்கு அனுமதி.

குற்றப் புலனாய்வுத்துறையின் தடுப்புக்காவலில் உள்ள, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானுடன் ( சிவநேசதுரை சந்திரகாந்தன்) பேசுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத் தலமாகும் இனப்படுகொலை நினைவுச்சின்னங்கள்

சிறிலங்காவின் போர் மற்றும் இனப்படுகொலை நினைவுச் சின்னங்கள்,  பூகோள இருண்ட சுற்றுலா (Dark Tourism) சந்தையின் வளர்ச்சி மற்றும் வருமான அதிகரிப்புக்கான காரணிகளில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்துக்களை நீக்குமாறு மோடியிடம் வலியுறுத்திய மகாநாயக்கர்கள்

இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் உள்ள  பௌத்த புனிதத்தலமான புத்தகயாவின் முகாமைத்துவப் பொறுப்பில் இருந்து இந்துக்கள் நீக்கப்பட வேண்டும் என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், சிறிலங்காவின் பௌத்த பீடங்கள் வலியுறுத்தியுள்ளன.

சிக்கலில் சிக்கினார் அமைச்சர் வசந்த சமரசிங்க

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், வர்த்தக அமைச்சராக உள்ள, வசந்த சமரசிங்க, மோசடி வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்படுவாரா என்பது குறித்து கல்கிசை நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.