மேலும்

சுற்றுலாத் தலமாகும் இனப்படுகொலை நினைவுச்சின்னங்கள்

சிறிலங்காவின் போர் மற்றும் இனப்படுகொலை நினைவுச் சின்னங்கள்,  பூகோள இருண்ட சுற்றுலா (Dark Tourism) சந்தையின் வளர்ச்சி மற்றும் வருமான அதிகரிப்புக்கான காரணிகளில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட travel and tour world வெளியிட்டுள்ள சுற்றுலா தரவுகளில் இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளுடன் சிறிலங்காவும், இருண்ட சுற்றுலா சந்தை வாய்ப்பைக் கொண்ட நாடுகளாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன.

வளமான வரலாற்று நிலப்பரப்பு, உணர்வுபூர்வமான அடையாளங்கள், சுற்றுலாத்துறையின் மீதான முதலீடுகள் காரணமாக, இந்த நாடுகளில் இருண்ட சுற்றுலாத்துறை வருமானம் 2032 ஆம் ஆண்டில் 39.77 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலந்தின் ஆஷ்விட்ஸ் (Auschwitz) இல் உள்ள நாஸி வதை முகாம்கள் மற்றும் இனஅழிப்பு மையங்கள், அமெரிக்காவில் அல்காட்ராஸ் (Alcatraz)  தீவில் உள்ள சிறை, இந்தியாவில் ஜாலியன்வாலா பாக், சிறிலங்காவின் இனப்படுகொலை நினைவுச்சின்னங்கள், மற்றும் ஆர்ஜென்ரீனா மற்றும் பிரேசிலில் உள்ள முன்னாள் சர்வாதிகார சிறைச்சாலைகள் போன்றன உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலாத் தளங்களாக இருக்கின்றன.

கல்வி, சிந்தனை மற்றும் ஆழமான பயண அனுபவங்களைத் தேடும் மில்லியன்கணக்கான சர்வதேச மற்றும் உள்நாட்டு பார்வையாளர்களை இவை ஈர்க்கின்றன.

வரலாற்றுடன் இணைவதற்கும், கடந்த கால அட்டூழியங்களை எதிர்கொள்வதற்கும், ஒரு காலத்தில் சோகத்தால் குறிக்கப்பட்ட இந்த இடங்களை ஆராய்வதிலும் அதிகரித்து வரும் பயணிகளின் விருப்பமே இந்த இந்த சுற்றுலாச் சந்தை எழுச்சிக்குக் காரணம்.

இதனால் இவை இப்போது நினைவகம், கற்றல் மற்றும் கலாசார விழிப்புணர்வுக்கான இடங்களாக மாற்றப்பட்டுள்ளன.

சர்வதேச இருண்ட சுற்றுலா சந்தை தொடர்ச்சியாக விரிவடைந்து வருகிறது.

இது வரலாறு, பாரம்பரியம் மற்றும் சர்ச்சைக்குரிய மரபுகளுடன் தொடர்புடைய தளங்கள் மீதான பயணிகளின் அதிகரித்து வரும் ஈர்ப்பால் இயக்கப்படுகிறது.

அண்மைய சந்தை பகுப்பாய்வின்படி, 2025 ஆம் ஆண்டில்  இந்த தொழில்துறையின் மதிப்பு 32.76 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.

இது 2032 ஆம் ஆண்டில் 39.77 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயரும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த வளர்ச்சிப் போக்கு சுற்றுலாப் பயணிகளின் நடத்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை எடுத்துக் காட்டுகிறது.

மரணம், பேரழிவுகள் அல்லது வரலாற்று துயரங்களுடன் தொடர்புடைய இடங்களைப் பார்வையிடுவதை உள்ளடக்கிய இருண்ட சுற்றுலாச் சந்தை, இனப்படுகொலை நினைவுச்சின்னங்கள், போர்க்களங்கள், பேய் இடங்கள், அணுசக்தி பேரிடர் வலயங்கள் மற்றும் சிறைச்சாலைகள் போன்ற இடங்களை உள்ளடக்கியதாக உள்ளது.

பார்வையிடலுக்கு அப்பால், இந்த தனித்துவமான சுற்றுலாத்துறை ஆழமான பிரதிபலிப்பு, கல்வி மற்றும் கலசார புரிதலை ஊக்குவிப்பதாகவும் உள்ளது என்றும் travel and tour world ஊடகம் மேலும் விபரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *