18 உள்ளூராட்சி சபைகளில் அஞ்சல் வாக்களிப்பு தாமதம்.
கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 18 உள்ளூராட்சி சபைகளுக்கான, அஞ்சல் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மே 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்களைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவு மேல்முறையீட்டு நீதிமன்றத்தினால், பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, இந்த உள்ளூராட்சி சபைகளுக்கான அஞ்சல் வாக்குச்சீட்டுகளை அச்சிடுவது இடைநிறுத்தப்பட்டதால், இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது.
எனினும், ஏப்ரல் 11 ஆம் திகதி, மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த இடைக்காலத் தடை உத்தரவை நீக்க உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் தீர்ப்பை பரிசீலனை செய்து வருவதாகவும், அதன்படி அரசாங்க அச்சகத்திற்கு அறிவுறுத்தல் வழங்கவுள்ளதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, கூறியுள்ளார்.
அதேவேளை, நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பாக நீதிமன்றங்களில் மனுத் தாக்கல் செய்யப்படாத 227 உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுகள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளன.
வரும், 22 மற்றும் 24 திகதிகளில் அஞ்சல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதுடன், அந்த நாட்களில் வாக்களிக்க திகதிகளில் வாக்களிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.