மேலும்

பிரிவு: செய்திகள்

வாக்குறுதியை நிறைவேற்றாத சிறிலங்கா – ஐரோப்பிய ஒன்றியம் கவலை.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பான வாக்குறுதியை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றாதமை குறித்து, ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழு கவலை வெளியிட்டுள்ளது.

தேர்தல் முடிந்ததும் மின்கட்டண அதிகரிப்பு- ஐஎம்எவ் இற்கு வாக்குறுதி

ஜூன் மாதம் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு, சர்வதேச நாணய நிதியத்திடம், உறுதியளிக்கப்பட்டுள்ளதாக பிரதி நிதி அமைச்சர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நடுநிலை வகிக்க வேண்டும் – எதிர்பார்க்கும் பாகிஸ்தான்

பஹல்காம் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவுடனான பதற்றம் அதிகரித்து, வரும் நிலையில் சிறிலங்கா நடுநிலையான, அணிசேரா கொள்கைளை பின்பற்ற வேண்டும் என, பாகிஸ்தான் எதிர்பார்ப்பதாக பாகிஸ்தானின் உயர்மட்ட இராஜதந்திர வட்டாரம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்திய – சிறிலங்கா தரைப்பால திட்டத்துக்கு இணங்கவில்லை- விஜித ஹேரத்

சிறிலங்காவை இந்தியாவுடன் இணைக்கும் தரைவழிப் பாலத்திற்கோ அல்லது திருகோணமலை வரையான நெடுஞ்சாலை நீடிப்பிற்கோ சிறிலங்கா அரசாங்கம் உடன்படவில்லை என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்  விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் இராணுவத் தளபதியுடன் சிறிலங்கா பாதுகாப்பு செயலர் சந்திப்பு

பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனிருடன் சிறிலங்கா பாதுகாப்பு செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த  சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

நீடிப்புக் கோர வழியில்லை – ஜிஎஸ்பி பிளஸ் க்கு மீள விண்ணப்பிக்க வேண்டும்

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ்  சலுகைக்கு, சிறிலங்கா மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியிருக்கும் என்று, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவைப் பாராட்டிய ரஷ்ய தூதுவர்

ரஷ்ய போரில் சிறிலங்கா நடுநிலையான நிலைப்பாட்டை, எடுத்திருப்பதற்கு, சிறிலங்காவிற்கான ரஷ்ய தூதுவர் லெவன் சஹாகார்யன் (Levan Dzhagaryan), நன்றி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சருடன் சிறிலங்கா பாதுகாப்பு செயலர் சந்திப்பு

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் சம்பத் துயகொந்த, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமட் ஆசிப்பை இஸ்லாமாபாத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபரிடம் ஒப்படைப்பு.

பட்டலந்த  வதைமுகாம்கள் தொடர்பான, குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வட, கிழக்கில் 2 1/2 இலட்சம் ஏக்கர் காணிகள் அபகரிப்பு – ஒப்புக்கொண்ட சிறிலங்கா

வடக்கு, கிழக்கில், இரண்டரை இலட்சம் ஏக்கர் காணிகள், வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால், அபகரிக்கப்பட்டுள்ளன என்பதை சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.