சிறிலங்காவில் இந்திய இராணுவக் குழு
இந்திய இராணுவ போர்க் கல்லூரியைச் சேர்ந்த 20 அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்திய இராணுவ போர்க் கல்லூரியைச் சேர்ந்த 20 அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
மூன்றாவது தவணைக் காலத்துக்காக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது குறித்த சட்டவிளக்கத்தை, சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் நேற்றிரவு அதிபர் செயலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்க்க பொதுவேட்பாளர் தயாராக இருந்தால், அத்தகைய வேட்பாளரை எந்த சந்தேகமுமின்றி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கும் என்று கட்சியின் பொதுச்செயலர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் மூன்றாவது தடவையும் தான் போட்டியிட முடியுமா என்று, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, விடுத்திருந்த கோரிக்கைக்கு சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் இன்று பதில் அளிக்கவுள்ளது.
நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று வர்த்தக நோக்கத்துக்காக கொழும்பு வராது, எனவே இந்தியாவின் பாதுகாப்புடன் விளையாட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார், இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பேச்சாளர் எம்.ஜே.அக்பர்.
சிறிலங்கா அரசாங்கம் வரும் ஜனவரி 2ம் நாள் அதிபர் தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் பொதுவேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயித் ராட் அல் ஹுசேன், எல்லைமீறி வார்த்தைகளை வெளியிட்டுள்ளதாக, ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க விசனம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, உள்ளூர் விசாரணைகளில் சாட்சியம் அளித்தவர்கள் ஐ.நா மனித உரிமை ஆணயாளர் பணியகம் நடத்தும் விசாரணைகளுக்குச் சாட்சியம் அளிக்க முடியாதவாறு அச்சுறுத்தப்படுவதாக, நீதி மற்றும் சமாதானத்துக்கான அமைப்பின் தலைவர் அருட்தந்தை மங்களராஜன் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் சிறிலங்கா அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக ஐதேகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கரு ஜெயசூரிய நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்தும் விசாரணைகளுக்கு சாட்சியப் படிவங்களை விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டில் சிறிலங்கா காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.