மேலும்

கதிரியக்க,அணுசக்தி அவசரநிலைகளுக்கு தயாராதல் குறித்து பயிற்சி

சிறிலங்கா கடற்பரப்பிற்குள் கதிரியக்க மற்றும் அணுசக்தி அவசரநிலைகளுக்குப் பதிலளிப்பதற்கான, நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOPs) உருவாக்கும்,  ஐந்து நாள் பயிற்சி பட்டறை கொழும்பில் நேற்று நிறைவடைந்துள்ளது.

இந்த நிகழ்வு, அமெரிக்க எரிசக்தித்துறையின் அணுக்கடத்தல் கண்டறிதல் மற்றும் தடுப்பு அலுவலகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

சிறிலங்கா கடற்படையின் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) பிரிவு, சிறப்புப் படகுப் படைப்பிரிவு மற்றும் சிறிலங்கா  கடலோரக் காவல்படை,   சிறிலங்கா அணுசக்தி ஒழுங்குமுறை சபை, சிறிலங்கா அணுசக்தி சபை, சிறிலங்கா துறைமுக அதிகார சபை, சிறிலங்கா சுங்கம், பேரிடம் முகாமைத்துவ மையம், வர்த்தக கப்பல் செயலகம், மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றை உள்ளடக்கிய முக்கிய தேசிய நிறுவனங்களின் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த அமர்வுகளில்  கடல் எல்லைக்குள் சட்டவிரோத அணுசக்திப் பொருட்களை இடைமறிப்பதற்கான தரப்படுத்தப்பட்ட செயல்பாட்டு வழிகாட்டுதல்களை நிறுவுவது குறித்த நடைமுறை வழிகாட்டுதலை வழங்கப்பட்டது.

கதிரியக்க அவசரநிலைகளின் போது, முகமைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதையும், உள்ளூர் கடல்சார் அதிகார அமைப்புகளிடையே செயற்பாட்டுத் திறனை மேம்படுத்துவதையும் இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *