மூத்த ஊடகவியலாளர் சபேசனின் உடலுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி
கனடாவில் காலமான மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் (சபேசன்) உடலுக்கு நேற்றிரவு யாழ். ஊடக அமையத்திலும், யாழ் தினக்குரல் நாளிதழ் பணியகத்திலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
யாழ். ஊடக அமையத்தின் தலைவராகவும், யாழ். தினக்குரல் நாளிதழ் ஆசிரியராகவும் பதவி வகித்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 29 ஆம் நாள் கனடாவில் காலமானார்.
அவரது உடல் நேற்றிரவு யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்ட நிலையில், யாழ். ஊடக அமையத்திலும், யாழ் தினக்குரல் நாளிதழ் பணியகத்திலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதன்போது, ஊடகவியலாளர்கள், ஊடக பணியாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் எனப் பலரும் சபேசனின் உடலுக்கு அஞ்சலியை செலுத்தினர்.
இன்று கொக்குவிலில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள சபேசனின் உடல் , நாளை இறுதிக் கிரியைகளை அடுத்து தகனக் கிரியைகளுக்காக யாழ்ப்பாணம் கோம்பையன் மணல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
முன்னதாக சபேசனின் உடல் கடந்த வியாழக்கிழமை ரொறன்ரோவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.




